திமுக கூட்டணி தொகுதி பங்கீடு ? வைகோ அவசர அழைப்பு !

திமுக கூட்டணி தொகுதி பங்கீடு ? வைகோ அவசர அழைப்பு !

வைகோ 

மதிமுக நிர்வாக குழு அவசரக் கூட்டத்திற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.

மதிமுக நிர்வாக குழு அவசரக் கூட்டத்திற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதிமுக நிர்வாக குழு அவசரக் கூட்டத்திற்கு நாளை காலை 10 மணிக்கு எழும்பூரில் உள்ள மதிமுக வின் தலைமை அலுவலகத்தில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அவசர அழைப்பு விடுவித்துள்ளார்.

2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட போவதாகவும், அதற்காக கட்சியில் இருக்கக்கூடிய அனைத்து நிர்வாகிகள், மாவட்ட செயலாளர், மாநில நிர்வாகிகள் என அனைவரும் கூட்டத்தில் தவறாமல் இருக்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அவசர கூட்டமாக இதை அறிவித்திருக்கிறார்.

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் கூட்டணியில் போட்டியிட்டு, ஈரோடில் ஒரு தொகுதி மக்களவையும் மாநிலங்களவைக்கு வைகோவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்போது திமுக கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை சுமூகமான முறையில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது தனது கட்சியினருக்கு அவசர அழைப்பு விடுத்துள்ளார்.

Tags

Next Story