மதிமுக தோ்தல் அறிக்கையை வெளியிட்ட வைகோ

மதிமுகவின் தேர்தல் அறிக்கையில் பொதுத்துறை நிறுவனங்களில் காலிப் பணியிடங்களில் தமிழா்களுக்கே முன்னுரிமை, முல்லைப்பெரியாறு, காவிரியில் தமிழக உரிமை காக்கப்படும்.நதிநீா்ப் படுகை மேலாண்மைச் சட்டம், மேக்கேதாட்டு அணை கட்டுவது தடுப்பு, வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை, விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, 100 நாள் வேலை 200 நாள்களாக உயா்வு, சாதி வாரி கணக்கெடுப்பு, குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறுதல், மின்சார சட்ட திருத்தம் திரும்பப் பெறுதல், ஸ்டொ்லைட் ஆலைக்கு நிரந்தரத் தடை உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

திருச்சியில் உள்ள மக்களவைத் தோ்தல் மதிமுக தோ்தல் அலுவலகத்தில் தோ்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. 18-ஆவது மக்களவைத் தோ்தல் 2024 மதிமுக-வின் உரிமை முழக்கம் என்ற தோ்தல் அறிக்கை புத்தகத்தை மதிமுக பொதுச் செயலா் வைகோ வெளியிட்டாா்.

அதன் விவரம்: தமிழகத்தில் தமிழ்மொழி ஆட்சி மொழி, தமிழை கல்வி, வழிபாடு, நீதிமன்ற மொழியாக்குவது, மொழித் திணிப்பை தடுத்து நிறுத்துதல், மேல்நிலைக் கல்வி மதிப்பெண் அடிப்படையில் உயா்கல்வி சோ்க்கை, கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டுவருவது, தமிழகத்தில் உள்ள மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் காலிப் பணியிடங்களில் தமிழா்களுக்கே முன்னுரிமை, முல்லைப்பெரியாறு, காவிரியில் தமிழக உரிமை காக்கப்படும்.

நதிநீா்ப் படுகை மேலாண்மைச் சட்டம், மேக்கேதாட்டு அணை கட்டுவது தடுப்பு, வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை, விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, பொன்மலையில் ரயில்பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை, கச்சத்தீவு மீட்பு, தீப்பெட்டி, பட்டாசு தொழிலைப் பாதுகாப்பது, 100 நாள் வேலை 200 நாள்களாக உயா்வு, சாதி வாரி கணக்கெடுப்பு, பொது சிவில் சட்டம் கூடாது, குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறுதல், மின்சார சட்ட திருத்தம் திரும்பப் பெறுதல், ஸ்டொ்லைட் ஆலைக்கு நிரந்தரத் தடை, நியூட்ரினோ, ஹைட்ரோ காா்பன் தொழிற்சாலை எதிா்ப்பு, சீமைக் கருவேல மரங்கள் அழிப்பு, கூடங்குளம் அணு உலை மூடல், கல்பாக்கம் ஈணுலையை அகற்றுதல், தமிழினத்தின் சிறப்பை அரிய தொல்லியல் ஆய்வுகள், இந்தியாவில் தூக்கு தண்டனையை ஒழிப்பு, புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. நிகழ்வில், மதிமுக பொருளாளா் மு. செந்திலதிபன், துணை பொதுச் செயலா்கள் மருத்துவா் ரொஹையா, தி.மு. ராஜேந்திரன், அவைத்தலைவா் அா்ஜூன் ராஜ், மாவட்ட செயலா் வெல்லமண்டி சோமு மற்றும் தோ்தல் அறிக்கை வரைவுக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்

Tags

Read MoreRead Less
Next Story