காதலர் தினம் - கோயம்பேடு மலர் சந்தையில் ரெட் ரோஸ் ரூ.300 !

காதலர் தினத்தை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மலர் சந்தையில் ரெட் ரோஸ் கட்டு 300 ரூபாய்க்கு விற்பனையானது.

கோயம்பேடு பேருந்து நிலையம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டதால் அண்டை மாவட்டங்களுக்கு பூக்களை விற்பனை செய்ய முடியாமல் பூக்களின் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். காதலர் தினத்தையொட்டி காதலர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தும் விதமாக ரோஜாப்பூ மலர்கள், வாழ்த்து அட்டைகள், சாக்லெட், செல்போன் மற்றும் விதவிதமான பரிசு பொருட்களை வாங்கி தங்களுக்கு பிடித்தவர்களுக்கு பரிசளித்து மகிழ்வார்கள்.

தற்போதைய காலக்கட்டத்தில் ஸ்மார்ட் செல்போன்கள் மூலம் வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வழியாக காதலர் தின குறுஞ்செய்தி, புகைப்படங்களை அனுப்பினாலும், ரோஜாப்பூ மற்றும் வாழ்த்து அட்டைகளை கொடுப்பது இப்போதும் பெருமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் காதலர் தினத்தன்று ரோஜா பூக்களுக்கு மவுசு இருக்கும் இதனால் கோயம்பேடு மலர் சந்தைக்கு ஓசூர் கிருஷ்ணகிரி பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வண்ண வண்ண ரோஸ் பூக்கள் வருகை தந்துள்ளது.

20 ரோஸ் கொண்ட ஒரு கட்டுப் பூவினை 300 ரூபாய் கோயம்பேடு மலர் சந்தை விற்பனை செய்து வருகின்றனர். ரெட் ரோஸ் 300 ரூபாய்க்கு கலர் ரோஸ் 250 ரூபாய்க்கும் மற்ற வகை ரோல்கள் 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று நாளை மறுநாள் மூர்த்த நாளாக இருப்பதால் கோயம்பேடு மலர் சந்தையில் மல்லிப்பூ கிலோ 700 ரூபாய்க்கும் ஜாதி மல்லி 500 ரூபாய்க்கும் சாமந்தி 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் கோயம்பேடு பேருந்து நிலையம் தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மாறியதன் காரணமாக பூக்களின் விற்பனை குறைந்து இருப்பதாகவும் செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து பூக்களை வாங்கிச் செல்ல வரும் வாடிக்கையாளர்கள் தற்போது வெகுவாக குறைந்து இருப்பதாகவும் இதனால் கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு பூக்களின் விற்பனை மந்தமாகவே நடைபெறுவதாக வியாபாரி வேதனை தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story