திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் வள்ளி கும்மி நடனம்!

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் வள்ளி கும்மி நடனம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த குழுவினர் பாரம்பரிய வள்ளி கும்மி நடனம் ஆடி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த குழுவினர் பாரம்பரிய வள்ளி கும்மி நடனம் ஆடி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், பொள்ளாச்சி அருகே உள்ள ஆத்து பொள்ளாச்சி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 7 முதல் 70 வயது வரை உள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 150 பேர் கொண்ட வெற்றி வடிவேலன் குழுவினர் வள்ளி கும்மி நடனம் ஆடினர். இதனை கோயிலுக்கு வந்த பக்தர்களும் கண்டு மகிழ்ந்தனர். இதுகுறித்து குழுவின் நடன ஆசிரியரான ராமகிருஷ்ணன் கூறியதாவது: கடந்த 40 ஆண்டுகளாக இந்த பாரம்பரிய கும்மி கலையை, இலவசமாக கற்பித்து வருகிறேன். முருகப் பெருமானின் மனைவியான வள்ளியின் பிறப்பு முதல் திருமணம் வரையிலான நிகழ்வுகள் குறித்து பாடலாக பாடப்படுவது இந்த வள்ளி கும்மியின் சிறப்பம்சமாகும். மனதிற்கு அமைதி தரக்கூடிய இந்த ஆட்டத்தை தற்போது ஏராளமானோர் ஆர்வத்துடன் கற்று வருகின்றனர் என்றார்.

Tags

Next Story