வேன் - லாரி மோதல்: சிறுமி உட்பட மூன்று பேர் பலி!

கோப்பு படம்
உத்திரபிரதேசம் மாநிலத்திலிருந்து கன்னியாகுமரி சுற்றுலா செல்வதற்கு ரயில் மூலம் 20 சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரம் வந்திருந்தனர். அங்கிருந்து நேற்று இரவு டூரிஸ்ட் வேன் மூலம் தூத்துக்குடி பாதைக்கு கன்னியாகுமரி சென்று கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை தூத்துக்குடி திருநெல்வேலி சாலையில் கீழ வல்லநாடு துணை மின் நிலையம் அருகே, எதிரே வந்த டிப்பர் லாரி இவர்கள் வந்த வேன் மீது மோதியது. இதில் வேனில் வந்த சுமன், பார்வதி ஆகிய இரண்டு பேர் சம்பவ இடத்திலே பலியானர்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் முறப்பநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த 15 பேரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொண்டு செல்லும் வழியில் ஒரு வயது சிறுமி ஶ்ரீ இறந்து விட்டார்.
தொடர்ந்து 14 பேரை பலத்த காயங்களுடன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து முறப்பநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
