வசிஷ்ட நதியில் மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம்

வசிஷ்ட நதியில் மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம்

செத்து மிதக்கும் மீன்கள்

வசிஷ்ட நதியில் மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள காட்டுக்கோட்டை மற்றும் அம்மம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான பத்துக்கும் மேற்பட்ட ஆலைகளில் செயல்பட்டு வருகிறது, மேலும் ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனம் கலந்த கழிவு நீர் வசிஷ்ட நதியில் உள்ள தண்ணீரில் கலப்பதால் வசிஷ்ட நதியில் உள்ள பல்லாயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்து வருகிறது,

இந்நிலையில் அப்பகுதி மக்கள் செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது காட்டுக்கோட்டை வசிஷ்ட நதியில் ஒவ்வொரு ஆண்டும் இந்த பகுதியில் உள்ள ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிநீர் கலப்பதால் மீன்கள் இறந்து வருகிறது,

இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல் தற்போது கடந்த சில தினங்களாக வசிஷ்ட நதியில் வரும் ரசாயனம் கலந்த கழிநீர் வசிஷ்ட நதியில் கலப்பதால் அதில் இருந்த மீன்கள் இறந்து துற்நாற்றம் வீசிவருகிறது. நதியின் அருகே அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது மேலும் இது வழியாக செல்லும் மக்களுக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயமாக உள்ளதாகவும்,

மேலும் இங்குள்ள விவசாய நிலத்தின் மன் வலம் கெடும் இங்குள்ள கால்நடைகளுக்கு அந்த தண்ணீரை பண்படுத்தி வருவதாகவும், இதனால் பல்வேறு தீங்கு விளைவித்து வருவதாகவும், இதனால் உடனடியாக அரசு அதிகாரிகள் ஆலையில் இருந்து வரும் ரசாயனம் கலந்த கழிநீர் வசிஷ்ட நதியில் கலக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று அப்பகு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story