வஉசி துறைமுக விரிவாக்கத்தின் நிலை: கனிமொழி எம்பி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்!

X
கனிமொழி எம்பி
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை பசுமை ஹைட்ரஜன் மையமாக மேம்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து கனிமொழி எம்பியின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார்
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை The transshipment hub ஆக அதாவது பல நீண்ட தூர கப்பல் வழித்தடங்களுக்கு இடையே பரிமாற்ற புள்ளியாக தரம் உயர்த்தும் திட்டம் அரசிடம் உள்ளதா? உள்ளது என்றால் அதுபற்றிய விவரங்கள் என்ன? இல்லை என்றால் அதற்கான காரணங்கள் என்ன?” என்று திமுக துணைப் பொதுச் செயலாளரும், மக்களவைக் குழு துணைத் தலைவரும் தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி கருணாநிதி எழுத்துபூர்வமாக மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்விக்கு மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் அளித்த பதிலில், "தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை பசுமை ஹைட்ரஜன் மையமாக மேம்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்திற்கு முன்மொழியப்பட்டுள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தின் இத்தகைய மேம்படுத்துதலில் பசுமை ஹைட்ரஜன்/பச்சை அம்மோனியா சேமிப்பு வசதிகள், உப்புநீக்கும் ஆலை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி காரிடார், ஜெட்டி எனப்படும் படகுத் துறைகள் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் அடங்கும். தூத்துக்குடி துறைமுகத்தை மேம்படுத்தும் வகையில் மேலும் மெகா கன்டெய்னர் கலன்களை கையாளும் திறன் கொண்ட இரு கன்டெய்னர் முனையங்களை அமைக்க பொதுத் துறை-தனியார் பங்களிப்பு வகையில் புற துறைமுகத் திட்டம் தற்போது தயாராகி வருகிறது” என்று பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
Tags
Next Story
