வாழப்பாடி ரூ7.87 லட்சத்திற்கு சோளம் ஏலம்
கொப்பரை தேங்காய்
வாழப்பாடியில் ரூ.7.87 லட்சத்திற்கு சோளம் மற்றும் கொப்பரை ஏலம் போனது
சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை மற்றும் மக்காசோளம் ஏலம் நடைபெற்றது. சுற்றுப்புற பகுதியில் இருந்து கொப்பரை மற்றும் மக்காசோளத்தை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஆக மொத்தம் 68 மூட்டைகளில் மக்காசோளம் மற்றும் 185 மூட்டைகளில் கொப்பரையை விற்பனைக்காக எடுத்து வந்திருந்தனர்.
மக்காசோளம் குவின்டால் ரூபாய் 2,150 முதல் ரூபாய் 2300 வரையிலும் கொப்பரை கிலோ ரூபாய் 50.75 முதல் ரூபாய் 84.15 வரையிலும் ஏலம் போனது. இதன் மூலம் ரூபாய் 7.87 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags
Next Story