சந்தன மரக் கடத்தல் வீரப்பன் நினைவுத் தினம் - அஞ்சலி செலுத்திய மனைவி

சந்தன மரக் கடத்தல் வீரப்பன் நினைவுத் தினம் - அஞ்சலி செலுத்திய மனைவி

வீரப்பன் நினைவிடத்தில் முத்துலட்சுமி அஞ்சலி

சந்தன மரக்கடத்தல் வீரப்பனின் 19-ம் ஆண்டு நினைவுத் தினத்தை முன்னிட்டு மேட்டூர் அருகே உள்ள அவரது நினைவிடத்தில் அவர் மனைவி முத்துலட்சுமி அஞ்சலி செலுத்தினார்

சேலம் மாவட்டம்,மேட்டூரில் சந்தன மரக்கடத்தல் வீரப்பனின் 19-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அவர் மனைவி முத்துலட்சுமி அஞ்சலி செலுத்தினார். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் தமிழக அதிரடிப்படையினரால் கடந்த 2004-ம் ஆண்டு வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து வீரப்பனின் உடல் மேட்டூர் அருகே மூலக்காட்டில் அடக்கம் செய்யப்பட்டது. ஆண்டு தோறும் வீரப்பன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் பல்வேறு கட்சியினர் அஞ்சலி செலுத்துவது வழக்கம். இந்த நிலையில் இன்று வீரப்பனின் 19-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நினைவிடத்தில் அவரது மனைவி முத்துலட்சுமி குடும்பத்தினருடன் வந்து அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story