தமிழகத்தில் 14 இடங்களில் சதம் அடித்த வெயில்

தமிழகத்தில்  14 இடங்களில் சதம் அடித்த வெயில்

பைல் படம்

தமிழகத்தில் இன்றைய தினம் 14 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக ஈரோட்டில் 107.6°F வெப்பமானது பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் இன்றைய தினம் 14 இடங்களில் வெயில் சதமடித்தது. இன்றைய தினம் தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 107.6°F வெப்பமானது பதிவாகி உள்ளது. அதேபோல் சென்னை மீனம்பாக்கம் 101.66°F, கோயம்பத்தூர் 101.84°F, தர்மபுரி 105.26°F, கரூர் பரமத்தி 105.8°F, மதுரை நகரம் 101.12°F, மதுரை விமான நிலையம் 103.28°F, பாளையங்கோட்டை 100.58°F, சேலம் 105.98°F, தஞ்சாவூர் 102.2°F, திருப்பத்தூர் 106.52°F, திருச்சிராப்பள்ளி 104.9°F, திருத்தணி 105.08°F, வேலூர் 106.88°F வெப்பமானது பதிவாகி உள்ளது.

Tags

Next Story