வேலூர்: சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது!
ரவி (வயது 46)
கே.வி குப்பம் பகுதியைச் சேர்ந்த சாராய வியாபாரியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா பசுமாத்தூரை சேர்ந்தவர் ரவி (வயது 46). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாராயம் விற்ற வழக்கில் கே.வி.குப்பம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நிர்மலா தலைமையிலான போலீசாரால் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ரவி மீது சாராயம் விற்பனை செய்தது தொடர்பாக கே.வி.குப்பம் உள்பட பல போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர் தொடர்ந்து சாராயம் விற்று வந்ததால் குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி வேலூர் மாவட்ட எஸ்பி மணிவண்ணன், கலெக்டர் சுப்புலெட்சுமிக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் ரவியை குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி கலெக்டர் உத்தரவிட்டார். அதற்கான ஆணையின் நகலை போலீசார் சிறை அலுவலரிடம் வழங்கினர்.
Next Story