வேலூர் மாநகராட்சி பாமக பெண் கவுன்சிலருக்கு விருது

வேலூர் மாநகராட்சி பாமக பெண் கவுன்சிலருக்கு விருது

பாமக பெண் கவுன்சிலர்

வேலூர் மாநகராட்சி பாமக பெண் கவுன்சிலரின் சமூக பணியை பாராட்டி தமிழகத்தின் நம்பிக்கை நாயகி என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

வேலூர் மாநகராட்சி 53-வது வார்டு பா.ம.க. கவுன்சிலர் பாபி கதிரவன். இவர், தனது வார்ட்டில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டுள்ளார். அதன்படி வார்டுக்கு உட்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் தனது சொந்த செலவில் பொருத்தியுள்ளார். மேலும் கால்வாய்களில் குப்பைகளை கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இது தவிர குளவிமேடு, பள்ளஇடையம்பட்டியில் உள்ள அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கும் பல லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார்.

மாணவர்களின் கல்வி மேம்படுவதற்காகவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.மலைக்கிராமங்களில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக கல்வி உபகரணங்கள் வழங்கி உள்ளார். தொடர்ந்து அவர் சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் ஓசூரில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் தமிழகத்தின் நம்பிக்கை நாயகி என்ற விருது அவருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story