வேலூர்: நாதக வேட்பாளர் திடீர் மாற்றம்

வேலூர் நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திடீரென மாற்றப்பட்டுள்ளது கட்சியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக முருகன் என்பவர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கோயம்புத்தூரை சேர்ந்த மகேஷ் ஆனந்தன் என்பவரை வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பாளராக நாம் தமிழர் கட்சி தலைமை அறிவித்துள்ளது. மகேஷ் ஆனந்தன் கோயம்புத்தூர் வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர். இவர் பொறியியல் பட்டதாரி. நாம் தமிழர் கட்சி வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டிருப்பது கட்சி நிர்வாகிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story