அதிமுக தலைமை இனி இவர்களே ! வேலுமணியா? செங்கோட்டையனா? மீண்டும் இபிஎஸ்-க்கு வந்த சோதனை!
அமைச்சர் ரகுபதி
அதிமுகவில் மீண்டும் இரட்டை தலைமை சர்ச்சை கிளம்புவதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இதுவரை இபிஎஸ், ஓபிஎஸ் என்ற சர்ச்சை இருந்து வந்த நிலையில் தற்போது வேலுமணியா செங்கோட்டையனா என்ற பிளவு அதிமுகவில் ஏற்பட உள்ளதாக புது சர்ச்சையை கிளப்பியுள்ளார் அமைச்சர் ரகுபதி.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே திமுக மருத்துவர் அணி சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால யாமினி வெளியே வந்தது வரவேற்கத்தக்கது.
சவுக்கு சங்கர் வீட்டில் காவல்துறை சோதனை மேற்கொண்ட போது உரிய சாட்சிகளுடன் கஞ்சா கைப்பற்றப்பட்டதால்தான் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது திமுக பொய் வழக்கு போட வேண்டிய அவசியம் இல்லை. பிரதமரின் பேச்சில் இருந்தே பாஜக தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் சட்டக் கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்குவது குறித்து பரிசீலிக்கபடும்." என கூறினார்.
மேலும் அதிமுக செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த அவர், " எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சி தலைவராக செயல்பட வேண்டும். அதைவிடுத்து, வேறு வகையான விமர்சனங்களில் ஈடுபடுவது அவரது பதவிக்கு ஆபத்தை ஏற்படுத்தும். தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுக தலைமை செங்கோட்டையன் தலைமையில் போகப் போகிறதா வேலுமணி தலைமையில் போகப் போகிறதா என்பதை பின்னரே அறிவோம்.
ஆனால் தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுகவில் பெரிய பிளவு உண்டாக வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 40க்கு 40 என வெற்றி பெற்று மூன்று ஆண்டுகால ஆட்சிக்கு கிடைத்த பரிசாக இருக்கும்" என பேசினார்.