பட்டியலின இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் அதிரடி தீர்ப்பு !

பட்டியலின இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் அதிரடி தீர்ப்பு !

தீர்ப்பு

கோவையில் கடந்த 2015ல் பட்டியலின இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்பட்ட மோதலில் அடித்து கொல்லப்பட்ட பட்டியலின இளைஞர் தாமரைக் கண்ணன் கொலை தொடர்பாக 14 பேர் மீது வழக்கு பதிவு செய்தது கோவை காவல்துறை.

வழக்குப்பதிவு செய்யப்பட்ட 14 பேரில் ஒருவர் வழக்கு நடைபெற்ற இடைப்பட்ட காலத்தில் உயிரிழந்தார். ஒருவர் நிரபராதி என விடுவிக்கப்பட்டார். மீதம் உள்ள 12 பேர் குற்றவாளிகள் என உத்தரவிடப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 2 பேருக்கு ஒரு ஆயுள் தண்டனை வழங்கி கோவை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

தல விக்கி, தோப்பு மகேந்திரன், டிப்ஸ் கார்த்திக், கவாஸ்கானுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

சுரேஷ், பிரகாஷ், நவீன், விமல், கௌதம், கலைவாணன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கிறிஸ்டோபர், கருப்பு கௌதம் ஆகிய 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது சிறப்பு நீதிமன்றம்.

8 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கில் தொடர்புடைய 12 பேரில் 10 பேருக்கு இரட்டை ஆயுள், 2 பேருக்கு ஆயுள் தண்டணை வழங்கப்பட்டுள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட அனைவரும் இன்று தீர்ப்பு உத்தரவு வெளியான பிறகு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags

Next Story