கொடிநாள் வசூல்

கொடிநாள் வசூல்

வாலாஜாபேட்டையில் கொடிநாள் வசூல் துவக்கம்.

வாலாஜாபேட்டையில் கொடிநாள் வசூல் துவக்கம்.

வாலாஜாபேட்டையில் வருவாய்த்துறை மூலமாக நடத்தப்படும் முன்னாள் படைவீரர்கள் கொடிநாள் வசூல் தினத்தில் 300-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று பேரணி நம் தாய்நாட்டை காக்கும் வகையில் பனி, வெயில், மழை எதுவும் பாராமல் நமது தேசத்திற்காக பாதுகாக்கும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் போர் வீரர்களின் மகத்தான சேவையினை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 7-ஆம் நாள் படைவீரர் கொடிநாளாக அனுசரிக்கப்படுகிறது.

இந்த படைவீரர் கொடி நாளில் தேசத்திற்காக பாதுகாக்கும் வீரர்களை கௌரவிக்கும் விதமாக இன்று ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் ஊர்வல பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது.. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் கலந்து கொண்டு ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் ஊர்வலத்தில் தேசிய மாணவர் படை (NCC) பள்ளி மாணவர்கள் வருவாய் துறை என 300-க்கும் மேற்பட்டோர் பேருந்து நிலையத்திலிருந்து முக்கிய சாலையின் வழியாக இசை முழங்க சென்றனர்.

தொடர்ந்து இந்த கொடிநாள் வசூல் ஊர்வலத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் பேருந்து நிலையம் தினசரி மார்க்கெட் ஆகிய சாலையின் ஓரமாக உள்ள கடைகளுக்கு சென்று கடையின் உரிமையாளர்கள் பொதுமக்களிடம் உண்டியலில் கொடிநாள் வசூல் செய்தனர்.

Tags

Next Story