கடத்தூரில் கால்நடை மருத்துவ முகாம்

கடத்தூரில் கால்நடை மருத்துவ முகாம்


கால்நடை மருத்துவ முகாம்


சின்னசேலம் அடுத்த கடத்துார் ஊராட்சியில் நடந்த மருத்துவ முகாமிற்கு, ஒன்றிய துணை சேர்மன் அன்புமணிமாறன் தலைமை தாங்கினார். மாவட்ட கால்நடை உதவி மருத்துவர் அண்ணாதுரை, கால்நடை உதவி ஆய்வாளர் முரளிகிருஷ்ணன், கால்நடை பராமரிப்பு உதவியாளர் ராமசாமி முன்னிலை வகித்தனர். ஊராட்சித் தலைவர் பேபிஅய்யாசாமி வரவேற்றார். முகாமில், 600 மாடுகள், 258 ஆடுகள் என மொத்தமாக 858 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், செயற்கை முறையில் கருவூட்டல், பொது சிகிச்சை, ஆண்மை நீக்கம், சினை ஆய்வு உட்பட பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Tags

Next Story