தேர்தலில் பாஜக அரசை தோற்கடிக்க வேண்டும்: மீனவர் நல வாரிய துணைத் தலைவர்

தேர்தலில் பாஜக அரசை தோற்கடிக்க வேண்டும்: மீனவர் நல வாரிய துணைத் தலைவர்

தாஜூதீன்

நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிய பாஜக அரசை தோற்கடிக்க வேண்டும் என மீனவர் நல வாரிய துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிய பாஜக அரசை தோற்கடிக்க வேண்டும் என, தமிழ்நாடு மீனவர் பேரவையின் மாநில பொதுச் செயலாளரும், தமிழக அரசின் மீனவர் நல வாரிய துணைத் தலைவருமான மல்லிப்பட்டினம் தாஜூதீன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றிய பாஜக ஆட்சியில் நாடு சிக்கித் தவிக்கிறது. எப்போதுமே மக்களை பதற்றத்திலும், பயத்திலும் நெருக்கடியிலும் வைத்திருப்பது தான் பாசிச ஆட்சி முறை, அப்படிப்பட்ட ஆட்சியை தான் மோடி தலைமையிலான பாஜக அரசு நடத்தி வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜவின் ஆட்சிக்கு முடிவு கட்டா விட்டால், அசாதாரணமான சூழ்நிலையை இந்திய மக்கள் சந்திக்க வேண்டிய நிலை உருவாகும். எனவே 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜவை தோற்கடிப்பது என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் செயல்பட வேண்டியது நாட்டை நேசிக்கும் அனைத்து மக்களின் முக்கிய கடமையாகும். 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக படுதோல்வியடையச் செய்ய வேண்டும் என்ற திட்டமே இந்திய மக்களிடம் மேலோங்கி இருந்தது. ஆனால் மக்களின் கருத்துக்கு மாறாக, அந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வரவிருக்கும் 2024 தேர்தலிலும் சதித் திட்டங்கள் மூலம் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜக முயற்சிக்கும். இது போன்ற செயல்களை முறியடிக்க அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story