தியேட்டரில் திருமணம் செய்த விஜய் ரசிகர்

தியேட்டரில் திருமணம் செய்த விஜய் ரசிகர்

தியேட்டரில் திருமணம் 

புதுக்கோட்டையை சேர்ந்த விஜய் ரசிகர் திரையரங்கில் தனது திருமணத்தை செய்துகொண்டார்.

புதுக்கோட்டையைச் சேர்ந்த காதலர்களான வெங்கடேஷ்-மஞ்சுளாவிற்கு நாளை பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் நடைபெற உள்ளது.இந்நிலையில் விஜய் ரசிகரான வெங்கடேஷ் இன்று புதுக்கோட்டையில் லியோ திரைப்படம் திரையிடப்படும் திரையரங்கம் ஒன்றில் திரை முன்பாக மஞ்சுளா உடன் மாலை மற்றும் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். அவர்களுக்கு விஜய் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை உற்சாகமாக தெரிவித்தனர். இன்று கிருத்துவ முறைப்படி மோதிரம் மாற்றி நடிகர் விஜய்க்காக திருமணம் செய்து கொண்டதாகவும் நாளை இந்து முறைப்படி கோயிலில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் மணமக்கள் தெரிவித்தனர்.




Tags

Next Story