விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பணிக்குழு அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பணிக்குழு அறிவிப்பு

ஜிகே வாசன்

பாமக வேட்பாளர் ஆதரித்து தேர்தல் பணி ஆற்ற பணிக்குழுவை தமிழ் மாநில காங்கிரஸ் அறிவித்துள்ளது.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் பா.ம.க. வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள் வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் அகட்சியின் தலைவர் ஜிகே வாசன் குழு ஒன்றினை அறிவித்துள்ளார்.அதில் விழுப்புரம் மத்திய மாவட்ட தலைவர் தசரதன் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்தக்குழுவில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் தைலா பி.ராஜேந்திரன், மாநில இணைச்செயலாளர் ஜெய பால், கொள்கை பரப்புச் செயலாளர் வானூர் முத்து, இணைச்செயலாளர் ஜெயமூர்த்தி, வி.சோழன், விழுப்புரம் நகர தலைவர் ஹரிபாபு, விக்கிரவாண்டி நகர தலைவர் தன சேகரன், விக்கிரவாண்டி கிழக்கு வட்டார தலைவர் ரங்கநா தன், விக்கிரவாண்டி மேற்கு வட்டார தலைவர் நாகப்பன், கானை வடக்கு வட்டார தலைவர் துரைசாமி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story