குரால் ஊராட்சியில் கிராம சபா கூட்டம்

X
குரால் ஊராட்சியில் கிராம சபா கூட்டம்
சின்னசேலம் ஒன்றியம், குரால் ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நடந்த கிராம சபா கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் லட்சுமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுஜாதா முன்னிலை வகித்தார். செயலாளர் அசோக்குமார் வரவேற்றார்.
கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் ஆறுமுகம், சக்திவேல், பவுனாம்பாள், தமிழ்மணி, அமுதா உள்ளிட்ட ஊர் மக்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களை கவுரவிக்க வேண்டும். எதிர்வரும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். இணைய வழி வீட்டு வரி உள்ளிட்ட கட்டணம் செலுத்தும் முறையை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Tags
Next Story
