விருதுநகர் : எகிறிய காபி விலை, இறங்கிய பருப்பு விலை

விருதுநகர் : எகிறிய காபி விலை, இறங்கிய பருப்பு விலை

பைல் படம் 

விருதுநகர் சந்தையில் காபி வகைகளின் விலை அதிகரித்தது. பாமாயில், துவரம்பருப்பு, பாசிப் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு ஆகியவற்றின் விலை சற்று குறைந்து காணப்பட்டது.

விருதுநகர் சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வாரந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது.

அதன் விபரம் வருமாறு : பாமாயில் கடந்த வாரம் 15 கிலோ 1565 என விற்கப்பட்டது. இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ.25 குறைந்துள்ளது.எனவே, ரூ.1540 என விற்பனையாகிறது. வத்தல் நாடு புதுசு வகையின் ஆரம்ப கட்ட விலை கடந்த வாரம் ரூ.12500 முதல் 16ஆயிரம் வரை விற்பனையானது. இந்த வாரம் ரூ.1500 வரை குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே, ஆரம்ப கட்ட விலை ரூ.11ஆயிரம் முதல் 15ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் குண்டூர் வத்தல் கடந்த வாரம் ரூ.14ஆயிரம் முதல் 18ஆயிரம் வரை விற்கப்பட்டது. இந்த வாரம் ஆயிரம் ரூபாய் வரை குறைவு ஏற்பட்டு தற்போது ரூ.13ஆயிரம் முதல் 16ஆயிரம் வரை விற்கப்படுகிறது. துவரம் பருப்பு நயம் புதுசு லையன் வகை 100 கிலோ கடந்த வாரம் ரூ.15,500 என விற்கப்பட்ட நிலையில், இந்த வாரம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1700 குறைந்துள்ளது. எனவே, மூட்டை ஒன்று ரூ.13800க்கு விற்பனையாகிறது. கடலை புண்ணாக்கு 100 கிலோ கடந்த வாரம் ரூ.5200 என விற்றது. இந்த வாரம் ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, மூட்டை ஒன்று ரூ.5300க்கு விற்கப்படுகிறது.

காபி வகைகளின் விலை உயர்வு : காபி பிளாண்டேசன் பிபி வகை 50 கிலோ கடந்த வாரம் ரூ.18250 என இருந்தது. இந்த வாரம் ரூ.2750 உயர்த்தப்பட்டு தற்போது ரூ.21ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. காபி பிளாண்டேசன் ஏ வகையானது கடந்த வாரம் ரூ.18 ஆயிரம் என இருந்த நிலையில் இந்த வாரம் ரூ.3ஆயிரம் உயர்த்தப்பட்டு தற்போது ரூ.21ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. இதேபோல், சி வகையானது ரூ.16500 என இருந்த நிலையில் ரூ.1500 வரை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, ரூ.18ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. மேலும் ரோபஸ்டா பி.பி 50 கிலோ கடந்த வாரம் 18250 என விற்ற நிலையில் இந்த வாரம் ரூ.1750 வரை உயர்ந்து, தந்போது ரூ.20ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. இதேபோல் பிளாக் பிரவுன் வகை காபியானது 50 கிலோ ரூ.17ஆயிரத்திற்கு விற்ற நிலையில், இந்த வாரம் ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. எனவே, ரூ.18ஆயிரத்திற்கு தற்போது விற்கப்படுகிறது.

உளுந்து லையன் வகை 100 கிலோ கடந்த வாரம் ரூ.10,200 என விற்றது. இந்த வாரம் ரூ.200 குறைந்துள்ளது. எனவே, குவிண்டால் ஒன்று ரூ.10ஆயிரம் என விற்கப்படுகிறது. பாசிப்பயறு இந்தியா லையன் மீடியம் வகை கடந்த வாரம் ரூ.18,500 என விற்கப்பட்டது. இந்த வாரம் சந்தைக்கு அதிக அளவில் வரத்து இருப்பதால் குவிண்டால் ஒன்று ரூ.10500 என விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை பிற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

Tags

Next Story