விளாப்பாக்கம் பேரூராட்சி மன்ற மாதாந்திர கூட்டம்
விளாப்பாக்கம் பேரூராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் நடைபெற்றது
விளாப்பாக்கம் பேரூராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம் விளாப்பாக்கம் பேரூராட்சி கூட்ட அரங்கில் பேரூராட்சி கூட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவர் தி வ மனோகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ரேகா கார்த்திகேயன் ,செயல் அலுவலர் செ முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க வேண்டும்.டெங்கு கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த வேண்டும். அனைத்து வார்டுகளிலும் குடிநீர் வினியோகம் செய்வது குறித்தும், சாலை வசதியை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பாக திமிரி வட்டார குழந்தைகள் பாதுகாப்பு அழகு அலுவலர் நிரோஷா பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பது எப்படி பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அல்லது 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் என அவர் பேசினார். இதில் பேரூராட்சி உறுப்பினர்கள், சுகாதார மேற்பார்வையாளர் , பேரூராட்சி அலுவலக பணியாளர்கள், என பலர் கலந்து கொண்டனர்