அதிமுகவுக்கு சாதகமாக மாறும் வாக்கு வங்கி!

அதிமுகவுக்கு சாதகமாக மாறும் வாக்கு வங்கி!

அதிமுக

நடைபெறும் மக்களவை தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக கடுமையாக போட்டிப்போட்டாலும் கொங்கு மண்டலம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வெற்றி வாய்ப்பு அதிமுகவுக்கு சாதகமாக இருப்பதாக கருத்துகள் கூறப்படுகிறது. அப்படி எந்தெந்த இடங்கள் அதிமுகவுக்கு பலம் கொடுக்கும், எந்தெந்த இடங்களை திமுக கோட்டைவிடும் என்பதை விரிவாக பார்ப்போம்.

தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதால் கூட்டணியில் நீண்ட இழுப்பறி நீடித்தது. ஒருவழியாக பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்ற அதிமுக, தேமுதிகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. தேமுதிகவுக்கு திருவள்ளூர், மத்திய சென்னை, கடலூர், தஞ்சை, விருதுநகர் உள்ளிட்ட தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் ஆரம்பத்தில் திமுகவுக்கு சாதகமாக இருந்தால் தற்போது வெற்றி வாய்ப்பு அதிமுக பக்கம் சாதகமாக இருக்கு என்றே கூறப்படுகிறது. 2019ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு எதிர்ப்பு இருந்த போதும், தற்போது அது தலைகீழாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி, திருச்சி,சேலம், மதுரை, தென்காசி உள்ளிட்ட தொகுதிகள் அதிமுக பக்கம் இருப்பதாக கள நிலவரங்கள் கூறுகின்றன.

கள்ளக்குறிச்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் குமரகுருவுக்கு வெற்றி வாய்ப்புகள் இருப்பதாகவும், அவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிடும் மலையரசனுக்கு வெற்றி வாய்ப்பு குறைவு என்றும் கூறப்படுகிறது. இதேபோல் கிருஷ்ணகிரி, தருமபுரி தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவினாலும் வெற்றி வாய்ப்பு அதிமுகவுக்கே அதிகம் என கூறப்படுகிறது. கொங்கு மண்டலம் அதிமுக கோட்டையாக பார்க்கப்படுகிறது. திருப்பூர், கோவை மாவட்டங்கள் அதிமுகவுக்கு வெற்றியை தரும் தொகுதிகள். கோவை பாஜகவுக்கு சாதகமாக மாறி வருவதால் அதிமுக தனது பலத்தை நிரூபிக்க போராடி வருகிறது. கோவை அதிமுகவின் பலம், பாஜகவின் வளர்ச்சி பகுதி, திமுகவில் செந்தில் பாலாஜியின் ஆதரவு இருக்கும் பகுதி என்பதால் முன்முனை போட்டி கடுமையாகவே உள்ளது. இதனால் கோவை நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படுகிறது.

கோவையில் அதிமுக சார்பில் சிங்கை ஜி. ராமச்சந்திரன், திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், பாஜக சார்பில் அண்ணாமலை போட்டியிடுகின்றனர். இவர்கள் மூவருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. மூன்று பேரும் கோவை பிஎஸ்ஜி கல்வி நிறுவனத்தில் படித்தவர்கள். அண்ணாமலைக்காக பிரதமர் மோடி முதல் அமித்ஷா என தேசிய தலைவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். சிங்கை ராமச்சந்திரனுக்காக எடப்பாடி பழனிசாமியும், கணபதி ராஜ்குமாருக்காக முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனாலும், கோவை அதிமுகவுக்கே என்ற பேச்சு அடிப்படுகிறது.

இதற்கு காரணம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்த போது அவருக்கும், எஸ்பி வேலுமணிக்கு ஆதரவான பகுதியாக உள்ளது. பெரும்பாலான ஆதரவாளர்கள் அதிமுகவுக்கே வாக்களிப்பார்கள் என கூறப்படுகிறது. இதேபோல் மற்றொரு நட்சத்திர தொகுதியாக விருதுநகர் பார்க்கப்படுகிறது. விருதுநகர் விஜயகாந்தின் கோட்டையாக இருந்தது. விஜயகாந்த் மறைவு விருதுநகரில் அனுதாபத்தை தேடி தரலாம். அதனால் விருதுநகரில் அதிமுக கூட்டணியில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் போட்டியிடுகிறார். விருதுநகரில் விஜயகாந்த் பெயரை சொல்லி தீவிர வாக்கு சேகரிப்பில் விஜய பிரபாகரன் பேசி வருகிறார். அதேநேரம், விருதுநகரில் விஜயபிரபாகரனை எதிர்த்து பாஜக சார்பில் ராதிகா களம் காண்கிறார். திமுக சார்பில் காங்கிரஸ் சிட்டிங் எம்பி மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார்.

அண்மையில் எடுத்த கருத்துக்கணிப்பு ஒன்றில் விருதுநகரில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் ராதிகாவுக்கு கணிசமான ஓட்டு கூட கிடைக்காது என்றும், விஜயகாந்தின் அனுதாப ஓட்டுகள் விஜயபிரபாகரனுக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் விஜயபிரபாகனுக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. திமுகவின் கோட்டையாக பார்க்கப்படும் வடசென்னை, தென் சென்னை பகுதிகளிலும் அதிமுகவுக்கே சாதகமாக உள்ளது என கூறப்படுகிறது. சென்னையில் வெள்ளம் சூழ்ந்தது குறித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்து வருகிறார். மழை வெள்ளத்தின் பாதிப்புகளையும், திமுக அரசின் தவறுகளையும் சுட்டிககட்டி வீடியோ வெளியிட்டு எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்து வருகிறார்.

எடப்பாடியின் ஒவ்வொரு பேச்சுக்கும் கூட்டம் அதிகரிப்பதால் அதிமுகவுக்கு பலம் அதிகரிப்பதாக பார்க்கப்படுகிறது. வழக்கமான பிரச்சாரம் இல்லாமல் திமுகவை எப்படியெல்லாம் டார்கெட் செய்யலாம் என திட்டமிட்டு வீடியோ வெளியிட்டு பிரசாரம் செய்து வரும் எடப்பாடி பழனிசாமியுன் யுக்தி ஓரளவுக்கு வேலை செய்வதாகவே கூறப்படுகிறது.

Tags

Next Story