திமுக அரசை அப்புறப்படுத்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்கு - எடப்பாடி பழனிசாமி

திமுக அரசை அப்புறப்படுத்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்து அடித்தளமிடுவோம் எனக் காங்கேயத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் கட்சியினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அதிமுக பொதுச் செயலாளரும்,முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று காங்கேயம் வந்திருந்தார். அப்போது காங்கேயம் பேருந்து நிலையம் எதிரே 52 அடி நீளம் உயரமுள்ள கொடி கம்பத்தில் அதிமுக கொடி ஏற்றி வைத்தார். பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர் விடியா திமுக அரசு பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. இந்த பகுதியில் நெசவு வேளாண் தொழில் செய்ப்பவர்கள் அதிகம் உள்ளனர். ஆனால் இந்த தொழில் செய்பவர்கள் விடியா திமுக அரசால் பாதிக்கபப்ட்டுள்ளதாகவும் , கொப்பரை விலை அதிமுக ஆட்சியில் ஏற்றி கொடுக்கபட்டது ஆனால் திமுக அவர்களை கண்டுகொள்ளவில்லை எனவும் ,அதிமுக ஆட்சி காலத்தில் மும்முனை மின்சாரம் கொடுக்கப்பட்டு வேளாண் துறை சிறப்பாக இருந்தது . திமுக அரசு விவசாயிகளுக்கு 2 லட்சம் பம்ப் செட் கொடுத்துள்ளதாக சொல்கிறார்கள் , ஆனால் எப்போது மின்சாரம் வரும் வராது என தெரியாமல் விவசாயிகள் அவதியுறுகின்றனர். அந்தளவிற்கு மின் தடை உள்ளது. அதேபோல் நெசவாளர்கள் துணிக்கு நியாமான விலை கிடைக்கவில்லை. இதனால் கைத்தறி விசைத்தறி தொழில் புரிபவரக்ள் நலிவடைந்து தறிகளை எடைக்கு போடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் நெசவாளர்கள் விவசாயிகள் மகிச்சியாக இருந்தனர் ஆனால் விவசாயம் ,நெசவு தொழில் திமுக ஆட்சியில் அழிந்து வருகிறது. ஒட்டு மொத்த தமிழகமும் அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது எனவே இந்நிலை மாற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு உங்கள் ஆதரவினை தர வேண்டும் அதிமுக நிறுத்தும் வேட்பாளரை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி உடுமலை ராதாகிருஷ்ணன் எம் எஸ் எம் ஆனந்தன் சட்டமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Tags

Read MoreRead Less
Next Story