வாக்களிப்பது தனிமனித உரிமை : அரக்கோணத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

வாக்களிப்பது தனிமனித உரிமை : அரக்கோணத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
X

விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரக்கோணம் ரயில்வே அலுவலகம் முன்பு வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஒன்றியத்துக்குட்பட்ட அரக்கோணம் ரயில்வே அலுவலகம் முன்பாக இன்று வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் திட்ட இயக்குனர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. ரயில்வே நிலைய மேலாளர் ராதாகிருஷ்ணன் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் வட்டார மேலாளர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்வில் வாக்களிப்பது அனைத்து மக்களின் கடமை; வாக்களிப்பது தனிமனித உரிமை; வாக்களிப்பதற்கு பணம் பெற மாட்டோம் போன்ற வாசகங்களுடன் பதாகைகள் ஏந்தி வண்ணக் கோலங்கள் இட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் சமுதாய அமைப்பாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ரயில்வே ஊழியர்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story