உடையார்பாளையத்தில் தாமதமாக சென்று வாக்கு இயந்திரங்கள்

உடையார்பாளையத்தில் தாமதமாக சென்று வாக்கு இயந்திரங்கள்
சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்கு சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்களை உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா ஆய்வு செய்து அனுப்பி வைத்த போது எடுத்த படம்.
அரியலூர் மாவட்டம்,உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு பெட்டி அனுப்பும் பணியில் பல்வேறு குழப்பம் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகளை அந்தந்த மாவட்டங்களில் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவின் பேரில் வாக்கு சாவடிக்கு, வாக்குப்பதிவு எந்திரங்கள் சரியான நேரத்தில் அனுப்ப வேண்டும் என தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 290 வாக்குச்சாவடி மையங்களுக்கு1073 வாக்குப்பதிவு எந்திரங்கள் உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இங்கு பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர்களுக்கு போதிய முன் அனுபவம் இல்லாததால் வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பும் பணிகளில் குழப்பம் ஏற்பட்டு சரியான நேரத்தில் அனுப்ப முடியாமல் தினறினர்.

இதனால் காலதாமதம் ஏற்பட்டு பின்னர் ஒரு வழியாக மதியம் 1:30 மணி அளவில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்புவதற்குள் தேர்தல் அலுவலர்களுக்கு போதும் என்று ஆகிவிட்டது. வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் பணியிலேயே இவ்வளவு சுணக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் வாக்குப்பதிவை மற்றும் சிறப்பாக நடத்தி அதனை மீண்டும் பெற்று பாதுகாப்பு அறைக்கு சரியான முறையில் கொண்டு செல்வார்களா? என்கிற அச்சம் தற்போது எழுந்துள்ளது.

Tags

Next Story