ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக குறைந்தது!!

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக குறைந்தது!!

Hogenakkal

ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக இருந்த தண்ணீர் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.

கர்நாடக, தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் குறைந்தது. மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றிலும், அருவிகளிலும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பரிசலில் பாறைகளுக்கு இடையே சென்று காவிரி ஆற்றின் அழகை கண்டு ரசித்தனர். காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags

Next Story