மோடி வேலூருக்கு வந்ததால் எங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை: கதிர்ஆனந்த்

மோடி வேலூருக்கு வந்ததால் எங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை: கதிர்ஆனந்த்

கதிர் ஆனந்த் 

வேலூருக்கு வருகை தந்த மோடியினால் எங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என வேலூர் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் தெரிவித்துள்ளார்.

வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,"பிரதமர் மோடி வேடந்தாங்கல் பறவை போல சீசனுக்கு சீசனுக்கு வந்துவிட்டு போகிறார் என்று முதலமைச்சர் அற்புதமான விமர்சனத்தை தெரிவித்து இருந்தார்.

மக்களுக்கு தேவையான நேரத்தில் பிரதமர் மோடி தமிழ்நாட்டை எட்டி பார்க்கவில்லை. வெள்ள பாதிப்பின் போதும் வரவில்லை.ஆனால் தற்போது ஒவ்வொரு ஊருக்கு சென்று ஓட்டு கேட்கிறார். மோடிக்கு பெரிய வரவேற்பே இல்லை. நான் முயற்சி செய்து கொண்டு வந்திருக்க கூடிய விமான நிலையம் திறக்கப்பட வேண்டியது.

ஆனால் அரசியல் கால் புரட்சி காரணமாக எங்கே கதிர் ஆனந்த் பெயர் திறப்பு விழாவில் இடம் பெற்று விடமோ என்ற ஐயத்தில் மோடி அரசாங்கம் விமான நிலையத்தை திறக்கவில்லை. ஆனால் என்னுடைய முயற்சியில் கொண்டுவந்த விமான நிலையத்தில்தான் மோடி வந்து இறங்கியுள்ளார். நான் போட்ட ரோடில் தான் வேலூருக்கு வந்துள்ளார்.

அதேபோல தொல்லியல் துறையில் இருந்து நான் போராடி வாங்கிய கோட்டை மைதானத்தில் தான் வாக்கு கேட்கும் நிகழ்ச்சி நடந்துள்ளது. தமிழகத்திற்கு வந்திருக்கிறார். வேலூர் வந்திருக்கிறார். இதிலிருந்து தெரிய வேண்டாமா அவர் எந்த வகையான ஒரு குண்டு மணி அளவுக்கு திட்டம் கூட செய்யாமல் வாக்கு கேட்க வந்த உள்ளார். எங்கே போய் விடிய போகிறது என்று தெரியவில்லை. மோடி மண்ணை கவ்வ போவதும் உறுதி, திமுக கூட்டணி ஆளப்போவதும் உறுதி. மோடி வேலூருக்கு வந்ததால் எங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.

வந்தாரு, ஏதோ பேசினாரு.. ஒன்னும் புரியல.. கிளம்பி போயிட்டாரு. எல்லா பாமர மக்களும் மோடி ஆட்சி என்ன துரோகம் செய்தது என்பது தெளிவாக தெரிந்து வைத்துள்ளார்கள். முடி மறைக்க முடியாது. மோடி பத்து ஆண்டுகளாக தமிழக மக்களுக்கு வரலாற்றில் அழிக்கப்பட முடியாத துரோகங்களை செய்துள்ளார். ஆகவே மோடி ஆட்சி கண்டிப்பாக அகற்றப்படும்,"என்றார்.

Tags

Next Story