தனியாக நிற்க நாங்கள் தயார்- அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் கூட்டணி இல்லாமல் தனியாக நிற்க நாங்கள் தயார், வேறு கட்சிகள் தயாராக இருக்கிறார்களா என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை சென்னை திநகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்று வருகிறது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வெளியிட்டனர். அப்போது பேசிய நிறுவனர் ராமதாஸ், வருவாயில் 50% மாநிலங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த பாமக வலியுறுத்தும். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. 2019 ஆம் ஆண்டில் நாங்கள் ஆட்சியை கொடுத்தோம்.நாங்கள் இல்லை என்றால் எடப்பாடி ஆட்சி நடத்த முடியாத சூழல் இருந்தது. தொடர்ந்து பேசிய அன்புமணி ராமதாஸ், தேசிய ஜனநாயக கூட்டணிகள் பாமக பத்தாண்டுகளாக இருந்து வருகிறது, எங்கள் கூட்டணி வெற்றிக்கான கூட்டணி, கூட்டணிகளுக்கு இருந்தாலும் எங்கள் கொள்கைகள் சித்தாந்தங்களை விட்டுக் கொடுக்க முடியாது. சாதிவாரி மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்துவோம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சமூகத்திற்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படும். கல்வி வேலைவாய்ப்பில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும், தனியார் துறை நீதித்துறை ஆகியவற்றிலும் இட ஒதுக்கீடு கொண்டுவரப்படும். தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டுவரப்படும் மத்திய அரசின் வரி வருவாயில் 50 சதவீதம் மாநிலங்களுக்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும், உச்ச நீதிமன்றக் கிளையை சென்னையில் அமைக்க மத்திய அரசிடம் பாமக வலியுறுத்தும்.

தமிழ்நாடு கடந்த மூன்று மாதங்களில் கஞ்சா நாடாக மாறிடும் என்று பயம் ஏற்படுகிறது, முதலமைச்சர் அமைதி காக்கிறார்,இதை பற்றி அவர்களுக்கு சிந்தனேயே இல்லை. முதலமைச்சர் அவர்களை நான் நேரில் சந்தித்து பேசும்போது கூட இதை பற்றி கூறினேன், காவல் துறைக்கு தெரியாமல் இது எல்லாம் நடக்காது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திமுக அரசு மறுக்கிறது. கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் தொடர்ந்து குரல் கொடுப்போம் விடமாட்டோம். கடந்த முறை வைத்த 10 கோரிக்கைகளில் ஐந்து கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சித்தாந்தத்தை மாற்றாத ஒரே கட்சி பாமக. தேர்தலுக்காக கொள்கையை நாங்கள் விடவில்லை. சமூக நீதிக்காக எங்களைத் தவிர வேறு யாரும் போராடவில்லை, எங்களின் கொள்கைகள் வேறு, பாஜகவின் கொள்கைகள் வேறு, 57 ஆண்டு காலம் இந்த இரண்டு கட்சிகளும் தமிழ்நாட்டை நாசம் செய்து வைத்துள்ளது, இதற்கு ஒரு மாற்றம் வர வேண்டும், இதனால் தான் பாஜகவில் இணைந்தோம் தமிழகத்திற்கு நல்ல திட்டங்களை கொண்டு வருவோம். திமுக அண்ணா, பெரியாரின் கொள்கை மறந்துவிட்டு, ஆட்சி நடத்தாமல் வியாபாரம் நடத்தி வருகின்றனர். நாங்கள் வேடந்தாங்கல் சரணாலயம். எங்களிடம் யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம் உயிர் கொடுப்போம். 10.5 சதவீதத்தை அரைகுறையாக நிறைவேற்றினார்கள்,இதை நிறைவேற்றக்கூடாது என்று பிடிவாதத்தில் இருந்தார்கள், நிறைவேற்ற வேண்டும் என்று நானும் பிடிவாதத்தில் இருந்தேன், எங்களுக்கு கூட்டணி வேண்டாம் சீட்டு வேண்டாம், 10.5 தான் வேண்டும் என்று கூறினேன். கடந்த ஆறு மாதமாக விசிகாவை கூட்டணிக்கு வாங்க என்று எடப்பாடி கேட்டுக் கொண்டிருக்கிறார், சீமானை கூட்டணிக்கு அழைத்தார், அதன் பின் எங்களையும் அழைத்தார், யாரும் அவருடன் கூட்டணிக்கு செல்லவில்லை.

தற்போது, இருக்கும் ஒரு மூன்று அமைச்சர்கள் நன்றாக செயல்படுகிறார்கள் மற்றவர்கள் அனைவரும் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். சமூக நீதிக்கும் திமுகவிற்கும் சம்பந்தமே கிடையாது. 35 நிமிடம் சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் 10.5 சம்பந்தமாக முதலமைச்சரிடம் பேசினேன், இன்று வரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை, அவர்களுக்கு வகுப்பெடுப்பது போல பேசினேன். அதிமுக கூட்டணி குறித்த கேள்விக்கு குப்பை செய்தி போன்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல நாங்கள் தயாராக இல்லை 2006 இல் திமுக எங்கள் ஆதரவால் ஆட்சி நடத்தியது, அவர்களுக்கு ஆதரவு அளித்தோம், கடந்த காலத்தில் மத்திய அரசை விமர்சனம் செய்தோம் ,செய்யவில்லை என்று கூறவில்லை, எல்லாம் மக்களின் நலனுக்காக தான். திமுக அதிமுக மத்திய அரசு ஆகியவற்றை கூட விமர்சனம் செய்வோம், தமிழ்நாட்டில் கூட்டணி இல்லாமல் தனியாக நிற்க நாங்கள் தயார், தமிழ்நாட்டில் இதை சொல்ல வேறு கட்சிகள் தயாராக இருக்கிறார்களா?. என்று கேள்வி. சௌமியா அன்புமணி தர்மபுரி தொகுதியில் போட்டியிடுவது குடும்ப அரசியல் என்ற கேள்விக்கு, அப்படியே இருக்கட்டும் என்று பதில் தமிழகத்தில் 47 சுங்கச்சாவடிகள் இருக்கிறது, ஆனால் 17 தான் இருக்க வேண்டும், இதனை குறைக்க நடவடிக்கை எடுப்போம்.

Tags

Next Story