நாங்கள் ஆரிய ஆதிக்கத்திற்கு தான் எதிரி ஆன்மிகத்திற்கு அல்ல - முதலமைச்சர் பேச்சு

நாங்கள் ஆரிய ஆதிக்கத்திற்கு தான் எதிரி ஆன்மிகத்திற்கு அல்ல -  முதலமைச்சர் பேச்சு

முதலமைச்சர் பேச்சு  

சென்னை ஷெனாய் நகரில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்;- தமிழினத்தை தலை நிமிர்த்துவதற்காக பிறந்த இயக்கம்தான் திராவிட இயக்கம். என் பேச்சை லைக் மட்டும் செய்யாமல் ஷேர் செய்யுங்கள். அதிமுக, பாஜக போன்ற வெகுஜன விரோதிகளுடன் தற்போது நாம் மோதிக் கொண்டிருக்கிறோம். அதிமுகவும், பாஜகவும் நாணயமில்லாத நாணயத்தின் இரு பக்கங்கள். எனவே நம்முடைய செய்திகள் உண்மையாக இருக்க வேண்டும் பாஜகவை போன்று போலியாக இருக்கக்கூடாது என்றார்.

மேலும் பேசிய அவர், 'என் மனைவி துர்கா ஸ்டாலின் எந்த கோவிலுக்கு போறாங்கன்னு பாக்குறது தான் அவங்களுக்கு இருக்குற ஒரே வேலை...' நாங்கள் ஆரிய ஆதிக்கத்திற்கு தான் எதிரி ஆன்மிகத்திற்கு அல்ல'' 1000 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்த ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி எனப் பேசினார்.

Tags

Read MoreRead Less
Next Story