அரசியலுக்காக நாங்கள் இழந்தது அதிகம் - துரை.வைகோ

அரசியலுக்காக நாங்கள் இழந்தது அதிகம் - துரை.வைகோ

துரை.வைகோ 

"நாட்டின் நலனுக்காக நானும் எனது தந்தையும் இழந்தது அதிகம் . நான் சிகரெட் கம்பெனி நடத்தவில்லை. சிகரெட் விநியோகம் செய்யும் ஐடிசி விநியோகஸ்தராக, 200 பேரில் ஒருவராக தென்காசியில் இருந்தேன். எனது பணத்தை முதலீடு செய்து தான் அந்த தொழில் ஈடுபட்டேன். மதுவை எதிர்க்கும் நாங்கள் புகையிலை விற்பனை செய்யலாமா? என்று கேட்டனர். இந்த ஒரே விமர்சனத்திற்காக, ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக இந்த நிறுவனத்தில் இருந்து நான் ராஜினாமா செய்து விட்டேன் என துரை.வைகோ தெரிவித்தார்.

திமுக கூட்டணியில், திருச்சி மக்களவைத் தொகுதி வேட்பாளராக மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அறிவிக்கப்பட்டிருக்கிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டபின், துரை வைகோ இன்று விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு, மதிமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொஹையா, மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம், டிடிசி சேகரன் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பளித்தனர்.

அதைத் தொடர்ந்து துரை வைகோ செய்தியாளர்கள் அளித்த பேட்டி: திருச்சி மக்களவைத் தொகுதி மக்களுக்கு எல்லா தேவையும் நான் பூர்த்தி செய்து விடுவேன் என்று சொல்ல மாட்டேன். என்னால் சாத்தியப்பட்ட அனைத்து தேவைகளையும் கட்டாயம் நிறைவேற்றி தருவேன். இங்குள்ள அமைச்சர் பெருமக்களை பயன்படுத்தி, மக்களின் பிரதான கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன். நான் போட்டியிடும் சின்னத்தை பொறுத்தவரை, பம்பரம் சின்னத்தை பெறுவதற்கு உண்டான அனைத்து வகையான முயற்சிகளையும் தலைவர் வைகோ மேற்கொண்டு வருகிறார்.அப்படி பம்பரம் சின்னம் கிடைக்காவிட்டால், ஏதாவது ஒரு சுயாட்சி சின்னத்தில் போட்டியிடுவேன்" என்றார்.

"ஒரு சிகரெட் கம்பெனியை நடத்தியவர் எப்படி மக்களவை உறுப்பினராக மாற முடியும் என்று ஒரு சிலர் கேள்வி எழுப்புகிறார்களே..? என்ற செய்தியாளர் கேள்விக்கு, "நாட்டின் நலனுக்காக நானும் எனது தந்தையும் இழந்தது அதிகம் . நான் சிகரெட் கம்பெனி நடத்தவில்லை. சிகரெட் விநியோகம் செய்யும் ஐடிசி விநியோகஸ்தராக, 200 பேரில் ஒருவராக தென்காசியில் இருந்தேன். எனது பணத்தை முதலீடு செய்து தான் அந்த தொழில் ஈடுபட்டேன். மதுவை எதிர்க்கும் நாங்கள் புகையிலை விற்பனை செய்யலாமா? என்று கேட்டனர். இந்த ஒரே விமர்சனத்திற்காக, ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக இந்த நிறுவனத்தில் இருந்து நான் ராஜினாமா செய்து விட்டேன். இந்த நாட்டிற்காக, அரசியலுக்காக எனது குடும்பமும், நானும், எனது தந்தையும் இழந்தது அதிகம்" என்று உருக்கமாக கூறினார்.

Tags

Next Story