இருசக்கர வாகன பேரணியை வரவேற்ற கதிர் ஆனந்த் எம். பி
பைக் பேரணியில் எம்.பி
இருசக்கர வாகன பேரணியை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் வரவேற்றார்.
வேலூர்மாவட்டம் குடியாத்தம் வழியாக திமுக இருசக்கர வாகன பேரணி காட்பாடிக்கு இன்று வந்தது . இதில் - நீட் தேர்வு விலக்கு கோரியும் வருகின்ற 17 தேதி இளைஞர் அணி மாநாடு நடக்க இருப்பதை வலியுறுத்தியும் சமீபத்தில் நடைபெற்ற கன்னியாகுமரியில் இளைஞர் நல மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 85 ஆயிரம் கிலோமீட்டர் வரை செல்ல இருசக்கர விழிப்புணர்வுபேரணியை துவக்கி வைத்தார்.
இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களை கடந்து இன்று குடியாத்தம் வழியாக காட்பாடி வந்தடைந்த இருசக்கர வாகன பேரணியை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் வரவேற்றார் . உடன் துணை மேயர் சுனில் மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா மாமன்ற உறுப்பினர் அன்பு உள்ளிட்ட திரளானோர் உடன் சென்றனர்.
Tags
Next Story