நிர்மலா தேவி வழக்கில் 6 ஆண்டுகளாக என்ன நடவடிக்கை? - உயர் நீதிமன்றம்

நிர்மலா தேவி வழக்கில் 6 ஆண்டுகளாக என்ன நடவடிக்கை? - உயர் நீதிமன்றம்

 நிர்மலா தேவி

பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகள் கொடுத்த புகாரில் அருப்புக்கோட்டை கல்லூரி நிர்வாகம் 6 ஆண்டுகளாக என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகள் கொடுத்த புகாரை 6 ஆண்டுகளாக விசாகா கமிட்டி விசாரணைக்கு ஏன் அனுப்பவில்லை ? என அருப்புக் கோட்டை கல்லூரிக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் சாரமாரி கேள்வி எழுப்பியது. கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்தியதாக பேராசிரியை நிர்மலா தேவி மீது புகார் எழுந்தது. கல்லூரி பெண்களை தவறான பாதைக்கு அழைத்து சென்றது தொடர்பான வழக்கை பெண் டிஐஜி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி மதுரை சேர்ந்த கணேசன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Tags

Next Story