"ரூ.4,000 கோடியில் வடிகால் பணிகள் நடைபெற்றதாகக் கூறியது என்ன ஆனது?”- எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
மக்கள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
என்.எல்.சி-யிலிருந்து ராட்சத மோட்டார்களை பெற்று நீரை வெளியேற்றும் வரை மக்கள் அவதிப்பட வேண்டுமா?
வானிலை ஆய்வு மையம் எச்சரித்த போதும் திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
அதிமுக ஆட்சியில் மழை வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பாக எடுக்கப்பட்டன.
ரூ.4000 கோடியில் வடிகால் பணிகள் நடைபெற்றதாகக் கூறியது என்ன ஆனது.
முறையாக மழை நீர் வடிகால் பணிகளை முடிக்கவில்லை.
மழை நீர் வடிகால் திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.
முகாமில் தங்கியிருப்போருக்கு உணவு, மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை.
கடந்த ஆட்சியில் பொதுமக்கள் நிவாரண முகாம்களில் நன்கு பராமரிக்கப்பட்டனர்.
மின்சாரம் 2 நாட்கள் தடை செய்ய காரணம் செய்திகள் வாயிலாக மக்கள் உண்மை நிலையை அறிந்து கொள்ள கூடாது என்று தான்.
மின்சாரம் வழங்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.
இனியாவது போர்கால அடிப்படையில் செயல்பட்டு மீட்பு பணிகளை மேற்கொள்ள திமுக அரசை வலியுறுத்துகிறேன் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.