ஒடுக்கப்பட்ட சிறுபான்மை சமூகங்களுக்கு பாஜக என்ன செய்துள்ளது? கனிமொழி எம்பி கேள்வி

ஒடுக்கப்பட்ட சிறுபான்மை சமூகங்களுக்கு பாஜக என்ன செய்துள்ளது? கனிமொழி எம்பி கேள்வி

கனிமொழி 

ஒடுக்கப்பட்ட சிறுபான்மை சமூகங்களுக்கு மத்திய பாஜக அரசு என்ன செய்துள்ளது? என்று கனிமொழி எம்பி கேள்வி எழுப்பினார்.
தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவை சார்பில் தேவேந்திரகுல வேளாளர் அரசியல் எழுச்சி மாநாடு தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே பேரவைதலைவர் எஸ்.ஆர்.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் திமுக துணை பொது செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய கனிமொழி எம்பி "பாஜக நம்மை உணர்ந்து கொள்ளவோ புரிந்து கொள்ளக்கூடிய இயக்கம் இல்லை. நம்மமடைய பிளவுகள் இருந்தால் கூட அதை அதிகப்படுத்தி அதிகப்படுத்தி இங்கே இருக்கக் கூடிய அந்த அமைதியை குறைக்க கூடிய வகையிலே ஜாதியின் பெயரால் மதத்தின் பெயரால் நம்மை பிரித்து வன்முறைகளை உருவாக்கி அந்த வன்முறை அரசியலிலே அவர்களுக்கு என்று ஒரு இடத்தை நிரூபிக் கொள்ள துடித்துக் கொண்டிருப்பவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த பிஜேபி ஆட்சியிலே பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சிறுபான்மை சமூகங்களுக்கு இந்த ஆட்சி என்ன செய்திருக்கிறது என்பதை நீங்கள் கேட்க வேண்டும். கல்வி உதவி தொகை ஒடுக்கப்பட்ட சமூகங்களிலே இருக்கக்கூடிய மக்களுக்காக அந்த பிள்ளைங்க படிக்கணும் என்பதற்காக வசதியற்ற அந்த குடும்பங்களிலே வரக்கூடிய அந்த குழந்தைகள் கல்விக்காக கொடுக்கப்பட்ட அந்த கல்வி உதவி தொகை கூட நிறுத்தி இருக்கக்கூடிய ஆட்சி. அந்த உதவி தொகையை கூட நிறுத்தி இருக்கக்கூடிய ஆட்சி . ஒன்றியத்தில் இருக்கக்கூடிய பிஜேபி தலை நிமிரக்கூடாது. ஏனென்றால் இவர்கள் அரசியல் அதை ஏற்றுக்கொண்ட அரசியல் இல்லை இவர்களுடைய அரசியல் என்பது உயர்ந்த ஜாதி என்று யாரெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கான அரசியல் அந்த அரசியல் அவர்களை உயர்த்தக்கூடிய அரசியல் இட ஒதுக்கீடு கொண்டு வருகிறார்கள் என்றால் அது எப்படிப்பட்ட அரசியல் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பகுதியிலே மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிக்கு மத்திய நிதி அமைச்சர் வருகிறார். இங்கே இருக்கக்கூடிய இடங்களை எல்லாம் பார்வையிட அழைத்துச் செல்கிறோம் ஆனால் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நமக்கு ஒரு ரூபாய் கூட மத்திய அரசு வழங்கவில்லை. அவர்களுக்கு நம்ம பத்தி கவலை இல்லை தமிழகத்தில் விஷ விதைகளை தூவி அது மரமாகி அதன் அடியிலே உட்கார்ந்து குளிர்காய நிலைக்கக் கூடியவர்கள் தான் அவர்கள். ஆப்பிரிக்கா கண்டத்தில் இருந்து அங்கே மனித இனம் உருவாகி இந்த உலகம் முழுவதும் பறந்து விரிந்து கிடக்கிறது. ஒரு இடத்திலிருந்து உருவாகி வந்த ஒரு தாயின் பிள்ளைகள் நாம். இதை புரிந்து கொண்ட இந்த அறிவியலை தெரிந்து கொண்ட யாரும் சாதிய நம்ப முடியாது. திராவிட முன்னேற்றக் கழகம் எப்பொழுதும் என்றும் உங்களோடு நிற்கும் என தெரிவித்தார்.

Tags

Next Story