புதிதாக கருத்து கேட்டு என்ன செய்யப் போகிறது திமுக - ஓபிஎஸ்
ஓ.பன்னீர் செல்வம்
தேனி செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வருகை தந்தார் .தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;- _நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுக அரசு மக்களிடம் வாக்குறுதி குறித்து கருத்து கேட்பது குறித்த கேள்விக்கு, ஏற்கனவே கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை புதிதாக கருத்துக்கள் கேட்டு என்ன செய்யப் போகிறார்கள் என்று தான் மக்களிடம் குழப்பமாக உள்ளது.
அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைப்பு குறித்த கேள்விக்கு, ஒருங்கிணைப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது. அனைத்து தரப்பினரும் என்னுடன் இணைந்து வருபவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. _சசிகலா சந்திப்பு குறித்த கேள்விக்கு அறிஞர் அண்ணா நினைவகத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு திரும்ப வரும் வழியில் சின்னம்மாவை சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு.
அதிமுக ஒன்றிணைப்பில் எடப்பாடி பழனிச்சாமியை சேர்த்துக் கொள்வீர்களா? என்ற கேள்விக்கு ._ என்ன நிலைப்பாடில் இருக்கிறார் என்பதை நீங்கள் தான் கேட்டு சொல்ல வேண்டும். எங்களுடைய நிலைப்பாட்டை நாங்கள் சொல்லி விட்டோம். _இடைக்கால பட்ஜெட் போதுமானதாக இல்லை என கருத்துக்கு_ இது இடைக்கால பட்ஜெட் தானே. தேர்தல் நடைபெற்ற பின்பு முழுமையான பட்ஜெட் வரும் வரைக்கும் நிதி கோரப்படுகின்ற பட்ஜெட் ஆக தான் கருத வேண்டும்.