ரூ.4000 கோடி என்னவானது? - வெள்ளை அறிக்கை கேட்கிறார் அன்புமணி

ரூ.4000 கோடி என்னவானது? - வெள்ளை அறிக்கை கேட்கிறார் அன்புமணி

அன்புமணி

சென்னை தரமணி பகுதியில் புயல் மற்றும் மழையால் பாதித்த பொது மக்களுக்கு பால் மற்றும் உணவு பொருட்கள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நிவாரணமாக வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

சமீபத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகரம் இயல்பு நிலைக்கு வருவதற்கு இன்னும் தாமதம் ஆகி கொண்டு இருக்கிறது. பல பகுதியில் மின்சாரம், உணவு பொருட்கள், குடிக்க தண்ணீர் குட அவர்களுக்கு சேரவில்லை.

ஆகவே அரசு உடனடியாக மக்களை மீட்டெடுக்க வேண்டும் இன்னும் வேகப்படுத்த வேண்டும். இந்த புயல் பாதிப்புக்கு தமிழக அரசு ரூ.5000 கோடி வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டிருக்கிறது அதை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும்.

ராணுவ அமைச்சர் ராஜநாத் சிங் இங்கே வந்திருக்கிறார். அவர் டெல்லிக்கு சென்று எடுத்துக் கூறி நிவாரணத்தை வழங்க வேண்டும்,

1985இல் ஒரு வெள்ளம், 95 இல் ஒரு வெள்ளம், 2005 இல் ஒரு வெள்ளம், 2015 இல் ஒரு வெள்ளம், இப்பொழுது இந்த ஆண்டு வெள்ளம் வந்துள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில் வரலாறு காணாத வெள்ளம் வந்துள்ளது.

சென்னைக்கு அடுத்து ஐந்து ஆறு ஆண்டுகளில் இன்னும் பெரும் வெளளம் வர இருக்கிறது. காலநிலை மற்றும் பருவ நிலை மாற்றம் மிக மோசமாக உள்ளது

அனைத்து வகை உதவிகளை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்று எங்கள் கட்சி தொண்டர்களை அழைத்து கூறிக் கொண்டிருக்கிறேன்.

இன்னும் ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு பிறகு இரண்டாம் கட்ட காற்றும் வர உள்ளது. இப்பொழுது தேங்கி நிற்கின்ற தண்ணீரால் மலேரியா, டைப்பாய்டு, காலரா போன்ற தொற்று நோய்கள் நிச்சயமாக வரும்

ஆகவே தமிழக அரசு ஒவ்வொரு வார்டுகளிலும் மருத்துவ முகாம் நடத்த வேண்டும். மழை நீரில் சாக்கடை கலந்து கழிவுநீர் ஆக இருக்கிறது. இதனால் துர்நாற்றம், கொசு உற்பத்தி என்று பல பிரச்சினைகள் இருக்கிறது.

இது போன்ற ஒரு புயல் வந்தால் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். தொலை தொடர்பு சம்பந்தமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

2015ல் தமிழக அரசுக்கு எச்சரிக்கை அளித்தேன். சென்னையில் மிகப் பெரிய வடிகால்கள் உள்ளது. அடையார் கூவமாறு, பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட ஐந்து கால்வாய் உள்ளது.

12500 மீட்டர் இருந்த சதுப்பு நிலம் இன்று பள்ளிக்கரணையில் வெறும் 2500 ஏக்கர் தான் காலியாக உள்ளது. திமுக அரசியல் வாதிகளால் எல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டது.அதனால் தான் மழை நீர் போவதற்கு வழி இல்லை.

ரூ.4ஆயிரம் கோடி செலவு செய்து உள்ளோம் என்று கூறிய முதலமைச்சர் இந்த இழப்புகளை பார்க்கும் பொழுது 4000 கோடி செலவு செய்தாரா என்று தெரியவில்லை,

நாம் விரும்பும் சென்னை என்ற ஆவணத்தில் நாங்கள் முன்வைக்கின்ற யோசனைகளை தமிழக அரசு பயன்படுத்த வேண்டும். மக்கள் இவைகளை மறந்து விடுவார்கள், அரசு நிவாரணத்தை வாங்கிக்கொண்டு அமைதியாக இருந்து விடுவார்கள். மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்

புதிய தொழில்நுட்பங்களை வைத்து ஜப்பான் நாட்டை போல எந்தெந்த இடத்தில் மழை அளவு குறித்து மேக்கிங் செய்து கண்டறியும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதற்கு ஏற்ற கால்வாய்களை அமைத்து இருக்கிறார்கள். அதேபோல் தொழில்நுட்பத்தை இங்கேயும் பயன்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் அரசியல்வாதிகள் பெரும் ஊழல் லஞ்சம் என பல மோசடிகளை செய்து இந்த சென்னை மாநகரத்தை நாசம் செய்து விட்டார்கள்.

சென்னையில் மேயருக்கு அதிகாரம் கொடுங்கள். மீண்டும் சென்னைக்கு பெருமழை வர இருக்கிறது. அதற்கான முன் உச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்

வருங்காலங்களில் உணவு பஞ்சம் ஏற்படும் நிலை உள்ளது. ஆனால் தமிழக அரசு பல நிலங்களை விவசாய நிலங்களை கையகப்படுத்தி வருகிறது

சென்னை பகுதியில் மின்சார கட்டணத்தை தமிழக அரசு இந்த மாதம் ரத்து செய்ய வேண்டும்

அண்ணா திமுக காலத்தில் செய்த வேலை சரி செய்யவே ரூ.4000 கோடி ரூபாய் செலவு செய்தோம் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. இது குறித்து வெள்ளை அறிக்கையை கொண்டு வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story