பழைய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்ய மத்திய அரசைத் தூண்டியது எது? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

பழைய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்ய மத்திய அரசைத் தூண்டியது எது? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

 உயர் நீதிமன்றம் 

புதிய குற்றவியல் சட்டங்கள், நீதிமன்றத்தை சிரமத்திலும் மக்களை குழப்பத்திலும் ஆழ்த்தும் வகையில் உள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்கள் நடைமுறையில் இருந்த வந்த நிலையில், மத்திய அரசால் அவை "பாரதிய நியாய சன்ஹிதா, 2023", "பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023" மற்றும் "பாரதிய சாக்ஷியா சட்டம், 2023" என மாற்றப்பட்டு, ஜூலை 1 முதல் இந்த புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.

இந்த நிலையில், மத்திய அரசு அமல்படுத்திய 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஏற்கனவே உள்ள குற்றவியல் சட்டங்களில் சில திருத்தங்களை கொண்டு வந்திருக்கலாம். புதிய சட்டம் கொண்டு வருவதற்கு முன், குறைந்தபட்சம் சட்டக் கமிஷனின் கருத்துக்கள் பரிசீலிக்கப்பட வேண்டும். பொதுவாக, கொள்கை அளவிலான திருத்தங்களை கொண்டுவருவதற்கு கூட சட்டக் கமிஷனின் கருத்துக்கள் கேட்கப்படும். புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து சட்டக் கமிஷனின் கருத்துக்கள் கேட்கப்பட்டன, ஆனால் அது பரிசீலிக்கப்படவில்லை.

அப்போது நீதிபதிகள், "மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது. சட்டங்களை கொண்டுவருவதற்கு முன் சட்ட ஆணையத்தை ஆலோசித்திருக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.

மேலும், திமுகவின் ஆர். எஸ். பாரதி தொடர்ந்த இவ்வழக்கில் மத்திய அரசு 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags

Next Story