அதிமுகவினர் எங்கு கொடியேற்றினாலும் காவல்துறை பிரச்சினை செய்கிறது - முன்னாள் அமைச்சர் தங்கமணி
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் அதிமுக 51-வது ஆண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி, அதிமுக செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு அதிமுகவின் 52 அடி உயரம் கொண்ட பிரம்மாண்டமான கொடியையும் ஏற்றினர். இதனை தொடர்ந்து கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு குற்ற சம்பவங்கள் பெருகி உள்ளது அதனைப் பற்றி காவல்துறையினர் கண்டு கொள்ளாமல் அதிமுகவினர் எங்கு கொடியேற்றினாலும் வேண்டுமென்றே தடுத்து நிறுத்த முயல்கின்றனர். இது கண்டனத்துக்குரியதாகும், எருமப்பட்டி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 52 அடி உயரம் கொண்ட கொடி கம்பத்தை வைக்க கூடாது என காவல்துறையினர் பல்வேறு இடையூறுகளை செய்து வந்ததாகவும் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது இதற்கான தீர்வு கிடைக்கும் எனவும் தெரிவித்தார். உள்ளாட்சியில் எவ்வித பணிகளும் நடைபெறவில்லை எனவும் அங்கேயும் அதிமுக கவுன்சிலர்களை திமுகவினர் பணி செய்யவிடாமல் தடுத்து வருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் தமிழக முழுவதும் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டதாகவும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே கஞ்சா உட்பட போதை பொருட்களின் பயன்பாடு அதிகரித்து காணப்படுவதாகவும் இதனை அரசு கண்டு கொள்ளவில்லை எனவும் குற்றம் சாட்டினார். மேலும் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் கிடப்பில் போட்டுவிட்டு போட்டு விட்டதாகவும் திமுக பல்வேறு பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்ததாகவும் தெரிவித்தார். எனவே வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் அறிவிக்கப்படும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தர வேண்டும் எனவும் தெரிவித்தார்.