வெள்ளை நிறத்தில் புகையுடன் ஆவி பறக்க பூமியிலிருந்து வந்த நீரால் பரபரப்பு

வெள்ளை நிறத்தில் புகையுடன் ஆவி பறக்க பூமியிலிருந்து வந்த நீரால் பரபரப்பு
வெள்ளை நிறத்தில் புகையுடன் ஆவி பறக்க பூமியிலிருந்து வந்த தண்ணீரால் திடீர் பரபரப்பு
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பால் போன்று வெள்ளை நிறத்தில் புகையுடன் ஆவி பறக்க பூமியிலிருந்து வந்த தண்ணீரால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகாசி காமராஜர் சாலை ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் சாலையின் ஓரத்தில் பூமியிலிருந்து திடீரென ஒரு பள்ளம் ஏற்பட்டு அதிலிருந்து பால் போன்று வெள்ளை நிறத்தில் தண்ணீர் ஆவி பறக்க புகையுடன் வெளியேறும் காட்சியை அந்தப் பக்கமாக சென்ற வர்கள் பார்த்துள்ளனர். பார்த்தவர்கள் இந்த காட்சியை ஆராய்ச்சி செய்ததை சாலையில் சென்று வந்த பொதுமக்கள் பார்த்து கூட்டமாக கூடினர். புகையுடன் ஆவி பறக்க வெள்ளை கலரில் தண்ணீர் பூமியிலிருந்து வெளி வருவதை கண்ட பலரும் அதிசயத்துடன் பார்த்து அந்த தண்ணீரை எடுத்து தலையில் தெளித்துக் கொண்டு ஆய்வு செய்து ஒருவருக்கொருவர் ஆர்வத்துடன் இதனைப் பலவிதமாக தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். குழியி லிருந்து வெளிவரும் தண்ணீரை கலக்கி விட்ட போதும், மீண்டும் தண்ணீரின் தன்மை நிறம் வெண்மையாக மாறி ஆவி பறக்க புகை வெளிவருவது தொடர்வதாக உள்ளதால், இதனை மாநகராட்சி அலுவலர்கள் உள்பட பலரும் கண்டு அதிசயத்துள்ளனர். பால்வண்ண வெள்ளை கலரில் வெளிவரும் தண்ணீரை பாட்டிலில் எடுத்து அடைத்தவுடன் அதன் தன்மை வழக்கமான தண்ணீரின் நிறமாக மாறி விடுவதும், தண்ணீரில் குளோரின் வாசம் இல்லை எனவும் அதை பருகி பார்த்த பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதிகாரிகள் தரப்பில் நீர் எடுத்து செல்ல பட்டு ஆய்வுக்கு உட்படுத்த படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story