கொடைக்கானலில் மூன்று நிறங்களில் இ- பாஸ் வழங்கப்படுவது ஏன் ?
இ- பாஸ்
கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்கு மூன்று வகையான அடையாள கோடுகளுடன் கூடிய இ- பாஸ் வழங்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வருகை தரும் வெளி மாநிலம் ,வெளி மாவட்டம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி பதிவு செய்து வர வேண்டும்.
சுற்றுலா மற்றும் வர்த்தக ரீதியான வாகனங்களுக்கு ஊதா நிற அடையாளக் கோடுகளுடன் கூடிய இ-பாஸ் வழங்கப்படுகிறது.
அத்தியாவசிய பொருட்கள் சரக்குகளை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு நீல நிற கோடுகளுடன் கூடிய இ-பாஸ் வழங்கப்படுகிறது.
உதகை மற்றும் கொடைக்கானலைச் சேர்ந்த பொதுமக்கள் வெளியூர் பதிவு எண் கொண்ட வாகனத்தை பயன்படுத்தினால் பச்சை நிற இ-பாஸ் வழங்கப்படுகிறது.
சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தர எந்த தடையும் இல்லை என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
epass.tnega.org என்ற இணைய தளத்திற்கு செல்ல வேண்டும் உங்கள் நீலகிரி செல்ல விரும்பினால் அந்த இடத்தை தேர்வு செய்து உங்களை பற்றி விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
நீங்கள் கொடைக்கானல் செல்கிறீர்கள் என்றால் அந்த இடத்தை தேர்வு செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்கும் போது நீங்கள் எந்த வாகனத்தில் பயணிக்கிறீர்கள், எத்தனை பேர் பயணிக்கிறீர்கள், எத்தனை நாட்கள் தங்கப் போகிறீர்கள், என்று என்பதையும் குறிப்பிட வேண்டும். மேற்கண்ட இணையதளத்தில் சுற்றுலாப் பயணிகள் வணிகம் வியாபார வேலையாக வருபவர்களுக்கும் பதிவு செய்து கொடைக்கானலுக்கு வரலாம்.
அரசு பேருந்துகளின் விபரங்கள் மற்றும் பயணிப்பவர்களின் விவரங்கள் நேரடியாக போக்குவரத்து துறை மேலாண்மை இயக்குனரிடம் இருந்து பெற்றுக் கொள்ள மாவட்ட நிர்வாகத்தால் திட்டமிடப்பட்டுள்ளது. அரசு பேருந்துகளில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் பதிவு அவசியம் இல்லை.