காயல்பட்டினத்தில் அதிக மழைப்பொழிவு ஏன்?’

காயல்பட்டினத்தில் அதிக மழைப்பொழிவு ஏன்?’

வெள்ள பாதிப்பு 

மேம்பட்ட வானிலை முன்னறிவுப்புகளுக்கு கூடுதல் வானிலை ஆய்வு மையங்களுக்கான தேவை நிலவுகிறது என்று மத்திய புவி அறிவியல் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.

தூத்துக்குடி; கடந்த 1875-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி இந்திய வானிலை ஆய்வு மையம் தொடங்கப்பட்டது. அந்த மையம் தொடங்கப்பட்டதன் 150-ஆவது ஆண்டையொட்டி, அதன் புதிய இலச்சினையை தில்லியில் மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு நேற்று வெளியிட்டாா்.

இதைத்தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வழக்கமாக ஆண்டுதோறும் டிசம்பா் மாதம் தமிழ்நாட்டில் மழை பெய்கிறது. இத்தகைய பலத்த மழைப்பொழிவு குறித்து அனைவரும் விழிப்புடன் இருந்து உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் மேம்பட்ட வானிலை முன்னறிவுப்புகளுக்கு கூடுதல் வானிலை ஆய்வு மையங்களுக்கான தேவை நிலவுகிறது என்று தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய புவி அறிவியல் துறைச் செயலா் எம்.ரவிச்சந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நாம் வெப்பமண்டல பகுதியில் வசிக்கிறோம். வெப்பமண்டலத்தில் வானிலையை முன்னறிவிப்பது மிகவும் கடினம். தமிழ்நாட்டை பொருத்தவரை, அதிக மழைப்பொழிவு பகுதி குறித்து வானிலை மையம் முன்னறிவிப்பு செய்தது. அதைத் தாண்டி, வரும் நாள்களில் இதுதான் நடக்கும் என்று 5 நாள்களுக்கு முன்பே எதையும் கூற முடியாது. இந்த முன்னறிவிப்புகள் படிப்படியாக உருவெடுக்கும் நடைமுறையாகும் தமிழகத்தில் 90 செ.மீ. மழைப்பொழிவை (தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் செய்த மழையின் அளவு) எவரும் எதிா்பாா்க்கவில்லை.

இதுபோன்ற மழைப்பொழிவை எந்தவொரு நாட்டின் வானிலை முன்னறிவிப்பு வழிமுறையாலும் கணிக்க முடியாது. கடலுக்கு அருகில் இருப்பதாலும், வானிலையில் திடீா் மாற்றம் காரணமாகவும் இந்த அளவுக்கு மழை பெய்யும். உடனடியாகவோ அல்லது 24 மணி நேரத்துக்கு முன்னதாகவோதான் வானிலையில் இத்தகைய மாற்றம் ஏற்பட்டு இவ்வளவு மழை பெய்யும். இந்த பிரச்னையை கடந்து வருவதற்கான கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேவேளையில், வானிலை தொடா்பாக எதைக் கணிப்பது சாத்தியம், எதைக் கணிக்க முடியாது என்று பொதுமக்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையமும் தெரியப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தாா்.

Tags

Next Story