குண்டர் சட்டம் ஏன்? சவுக்கு சங்கரால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? - உச்சநீதிமன்றம்

குண்டர் சட்டம் ஏன்?  சவுக்கு சங்கரால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?  - உச்சநீதிமன்றம்

சவுக்கு சங்கர் 

பெண் காவலர்கள் மீது அவதூறு கருத்துக்களை தெரிவித்தது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் யூ ட்யூபர் சவுக்கு சங்கர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி அவரது தாயார் முதலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இருவேறு மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். நீதிபதி பாலாஜி அரசு பதிலளிக்க அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.

நீதிபதிகள் இரு வேறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் வழக்கு மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.

இந்நிலையில் இவ்வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? தடுப்பு காவலில் ஒருவரை வைப்பது மிக தீவிரமான விஷயம். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் வகையிலா சவுக்கு சங்கர் செயல்பட்டாரா? நீங்கள் மிகக் கடுமையாக அவரிடம் நடந்து கொள்ள முடியாது. சவுக்கு சங்கரின் நடத்தையும் மன்னிக்க முடியாத ஒன்றுதான். இருப்பினும் ஏன் இடைக்கால நிவாரணத்தை வழங்கக் கூடாது? என தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

இதனையடுத்து மேல்முறையீடு மனுவுக்கு பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணைையை ஜூலை 18ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags

Next Story