கச்சத்தீவு குறித்து பேசிய பிரதமர் மோடியின் பாஸ்போர்ட் ரத்தாகுமா?

கச்சத்தீவு குறித்து பேசிய பிரதமர் மோடியின் பாஸ்போர்ட்டை ரத்தாகுமா? என பழ நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

காலாவதியாகி தனது பாஸ்போர்ட் , அடுத்த 10 ஆண்டுகளுக்கு புதுப்பிக்க உத்தரவிட கோரி உலகத் தமிழர் கூட்டமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் உயர்நீதிமன்றம் மனு அளித்துள்ளார்.

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக கூறியது சர்வதேச சட்டத்தை அவமதிக்கும் விதமாக உள்ளது எனது பாஸ்போர்ட் புதுப்பிக்கும் விண்ணப்பத்தை நிராகரித்து மண்டல பாஸ்போர்ட் அதிகாரி உத்தரவை எதிர்த்து பழ நெடுமாறன் வழக்கு தொடர்ந்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது கச்சத்தீவு குறித்து பிரதமர் மோடி பேசியதற்கு சர்வதேச அளவில் அவருக்கு எதிர்ப்பு உள்ளதாக மனுவில் பழ நெடுமாறன் தகவல்.

பிரதமரின் பேச்சு இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 51-ன்னுக்கு எதிரானது எனவே பிரதமர் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் ரத்து செய்வார்களா? என மனுவில் கேள்வி எழுப்பி உள்ளார். பாஸ்போர்ட் புதுப்பிக்க கோரிய மனு குறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பதில் அளிக்க நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags

Next Story