நெல்லைக்கு வருகை தரும் ஐஜி கண்ணன்- ஜெயகுமார் வழக்கு முடிவுக்கு வருமா ?

நெல்லைக்கு வருகை தரும் ஐஜி கண்ணன்- ஜெயகுமார் வழக்கு முடிவுக்கு வருமா ?

ஜெயகுமார் வழக்கு 

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் சடலமாக கண்டெடுக்கப்பட்டு இன்றுடன் 10 நாட்கள் ஆகிறது. ஜெயக்குமார் மரண வழக்கில் கடிதங்கள் உட்பட சில முக்கிய ஆதாரங்கள் கிடைத்தும் கூட ஜெயக்குமாருக்கு என்ன நடந்திருக்கும் என்பது தெரியாமல் இருந்து வருகிறது.

அந்த கடிதங்களில் தனது உயிருக்கு அச்சுறுதல் இருப்பதாக சொல்லி காங்கிரசின் முக்கிய நிர்வாகிகளின் பெயர்களையும் அவர் குறிப்பிட்டிருந்ததாக கூறப்பட்டது எனினும் இவ்வழக்கை பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நெல்லை எஸ் பி சிலம்பரசனின் ஜெயக்குமார் வீட்டு பகுதியில் முகாமிட்டு ஜெயக்குமாரின் மனைவி இரு மகன்கள் மகள் மருமகன் எனக் குடும்பத்தினர் அனைவரிடமும் விசாரணை நடத்தினார்.

ஆனாலும் ஜெயக்குமார் மரணத்தின் பின்னணியில் உள்ள மர்மம் இன்னும் விலகவில்லை தொழில் விவகாரம், அரசியல் விவகாரம், பெண் விவகாரம் என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தியும் எந்த வித தகவலும் கிடைக்கவில்லை. குறிப்பாக ஜெயக்குமாருக்கும் திசையன்விளை அருகே முத்தம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக தெரியவந்தது. அந்த பெண்ணையும் போலீசார் நேரில் அழைத்து விசாரித்தனர் விசாரணையில் அந்தப் பெண் ஜெயக்குமார் உடன் தொடர்பில் இருந்தது உண்மைதான் ஆனால் அவரது கொலை பற்றி எதுவும் தெரியாது எனக் கூறிவிட்டார்.

ஆனால் ஜெயக்குமார் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதற்கு முகாந்திரம் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. சடலமாக கண்டெடுக்கப்பட்ட ஜெயக்குமார் உடல் இரும்பு கம்பிகளால் கட்டப்பட்டும் வயிற்றில் கடப்பக்கால் கட்டப்படும் எரிக்கப்பட்டிருந்ததும் மேலும் வாயில் பாத்திரம் கழுவும் பிரஷ் திணிக்கப்பட்டிருந்தது முன்னதாக ஜெயக்குமாரின் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட அதன் அறிக்கை வல்லுநர் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் உடல் கிடந்த இடத்தில் மீட்கப்பட்ட தடயங்கள் அனைத்தும் உள்ளூர் தடைய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்த பிறகு மீண்டும் திண்டுக்கல்லில் இருந்து வந்த சிறப்பு தடய அறிவியல் குழுவினர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்நிலையில் உடல் கிடந்த இடத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் டார்ச் லைட் முக்கிய தடயமாக பார்க்கப்படுகிறது.

ஜெயக்குமார் காணாமல் போனதாக கூறப்பட்ட இரண்டாம் தேதி இரவு 10.30 மணி அளவில் அவர் அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டில் இருக்கும் சிசிடிவி காட்சி வெளியாகிறது. ஒருவேளை போலீசாருக்கு கிடைத்துள்ள டார்ச் லைட்டை அந்த சூப்பர் மார்க்கெட்டில் இருந்து தான் ஜெயக்குமார் வாங்கினாரா என்பதையும் தடய அறிவியல் துறை மூலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் கைப்பற்றப்பட்ட ஜெயக்குமார் உடல் தானே என்பதை உறுதி செய்து கொள்ள டிஎன்ஏ சோதனையும் செய்யப்பட்டது. இதற்காக ஜெயக்குமாரின் மகன் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு ஜெயக்குமார் உடல் எலும்புகள் ஆய்வுக்கு கொண்டு செல்லப்பட்டன. ஜெயக்குமார் வழக்கில் உடற்கூறு வல்லுனர் குழு அறிக்கை தடய அறிவியல் துறையின் சிறப்பு குழு அறிக்கை உள்ளிட்ட அனைத்து அறிக்கைகளின் முடிவுகளும் தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசனிடம் வழங்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

எனவே இந்த அறிக்கையில் ஜெயக்குமார் எப்படி உயிரிழந்தார் என்ற விவகாரம் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும் அந்த விவகாரத்தை மிக ரகசியமாக காவல்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் தென் மண்டல ஜிஜி கண்ணன் இன்று நெல்லை வருவதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. அவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசனை சந்தித்து ஜெயக்குமார் வழக்கின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்து இந்த ஆலோசனை மேற்கொள்வார் எனவும் கூறப்படுகிறது.

Tags

Next Story