நாமக்கல் - அரியலூர் 50 ஆண்டு கனவு ரயில் பாதை திட்டம் நிறைவேறுமா ?

நாமக்கல் - அரியலூர் 50 ஆண்டு கனவு ரயில் பாதை திட்டம் நிறைவேறுமா ?

நாமக்கல் - அரியலூர் 50 ஆண்டு கனவு ரயில் பாதை திட்டம் நிறைவேறுமா ? என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்

நாமக்கல் - அரியலூர் 50 ஆண்டு கனவு ரயில் பாதை திட்டம் நிறைவேறுமா ?

தமிழகத்தின் மையப் பகுதியான பெரம்பலூர் மாவட்டத்தில், ரயில் போக்குவரத்து வசதி இல்லை. ஆனால், பெரம்பலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள அரியலூர், திருச்சி, சேலம், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ரயில் போக்குவரத்து வசதி உள்ளது. பெரம்பலூர் மாவட்ட மக்கள் ரயில் போக்குவரத்து வசதியை பயன்படுத்த வேண்டுமானால், அரியலூர் அல்லது திருச்சிக்குச் செல்ல வேண்டும். இதனால், இந்த மாவட்ட மக்கள் சுமார் 50 ஆண்டுகளாக ரயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டுமென மத்திய, மாநில அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து, அரியலூர்- பெரம்பலூர்- துறையூர்- தா.பேட்டை வழியாக நாமக்கல் வரை ரயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டுமென, ஏற்கனவே எம்.பி. பாரிவேந்தர் லோக்சபையில் வலியுறுத்தி வருகிறார். இந்தக் கோரிக்கையை பரிசீலித்த மத்திய அரசு, மேற்கண்ட வழித்தடத்தில், நாமக்கல் மாவட்டத்தை இணைக்கும் வகையில் 108 கி.மீட்டர் தூரம் ரயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தும் வகையில், முதல் கட்டமாக சர்வே நடத்த உத்தரவிட்டது. முதல் கட்டமாக ரூ. 16.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சர்வே பணிகள் நடைபெற்று முடிந்துள்ளனர். அதன் பின்னர் எந்த முன்னேற்றமும் இன்றி இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு பரிவேந்தர் எம்.பி.க்கு ரயில்வே அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில், நாமக்கல் - அரியலூர் 116 கி.மீ புதிய ரயில் பாதைக்கு, இறுதியான லெக்கேஷன் சர்வே நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே கூடிய விரைவில் ரயில்பாதை அமைக்கும் பணிகளை துவங்க வேண்டும் என்பது 4 மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த ரயில்பாதை அமைக்கப்படும்போது இதுவரை ரயில் வசதி இல்லாத பெரம்பலூர், துறையூர் பகுதி மக்கள் பயன்பெறுவதோடு, நாமக்கலில் இருந்து டெல்டா மற்றும் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு நேரடி ரயில் இணைப்பு கிடைக்கும். மேலும் புதிய ரயில் பாதையால் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பகுதிகள் நன்கு முன்னேற்றம் அடையும் வாய்ப்பு உள்ளது. மேலும் எதிர்காலத்தில் இந்த திட்டம் நாமக்கலில் இருந்து திருச்செங்கோடு வழியாக ஈரோடு வரை நீட்டிக்கப்பட்டும் போது, மேற்கு மாவட்டங்களுக்கு சென்னை மற்றும் டெல்டா பகுதிகளுக்கு செல்ல இது மாற்றுப்பாதையாக அமையும். எனவே மத்திய ரயில்வே அமைச்சகம் விரைவாக நிதி ஒதுக்கீடு செய்து, புதிய ரயில் பாதை அமைக்கும் பணியை துவங்க வேண்டுமெனவும், இந்த 4 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story