அறிவுப் பரிமாற்றத்திற்கான திட்டங்களை சுவீடனுடன் இணைந்த பணியாற்ற தயார் - அன்பில் மகேஷ்

அறிவுப் பரிமாற்றத்திற்கான திட்டங்களை சுவீடனுடன் இணைந்த பணியாற்ற தயார் - அன்பில் மகேஷ்

அன்பில் மகேஷ் 

சுவீடன் நாட்டு அரசுப் பள்ளிகளில் உள்ள கட்டுமானங்களையும், அடிப்படை வசதிகளை பார்வையிட்டார்.

சுவீடன் நாட்டு அரசுப் பள்ளிகளில் உள்ள கட்டுமானங்களையும், அடிப்படை வசதிகளையும் பற்றி தெரிந்துகொள்ளும் விதமாக அந்த பள்ளிகளை பார்வையிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ள வகுப்பறை, உள்விளையாட்டரங்கம், கலையரங்கம், மாணவர்களின் கழிப்பறை போன்றவற்றைப் பார்வையிட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடி,. நமது மாணவர்களுக்கு உலகத் தரத்திலான கல்வியை வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்‌.

முதலமைச்சரின் திராவிடமாடல் அரசுஇந்தியாவிலேயே முதன்முறையாக Microsoft நிறுவனத்துடன் மேற்கொண்டுள்ள TEALS முன்னெடுப்பு குறித்தும், மணற்கேணி செயலி குறித்தும், தமிழ்நாட்டின் அனைத்துப் பள்ளிகளிலும் திறன்மிகு வகுப்பறைகளை(Smart Class) உருவாக்கும் திட்டம் குறித்தும் அவர்களிடம் பெருமையோடு எடுத்துரைத்து, அறிவுப் பரிமாற்றத்திற்கான திட்டங்களைத் தங்களுடன் இணைந்து செயல்படுத்த தயாராக உள்ளதாகவும் தெரிவித்ததாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags

Next Story