எங்களுக்கு டாஸ்மாக் வேண்டாம் - எதிர்ப்பு தெரிவித்த பெண்கள்!

எங்களுக்கு டாஸ்மாக் வேண்டாம் - எதிர்ப்பு தெரிவித்த பெண்கள்!

ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பெண்கள் 

புதிதாக அமைய உள்ள டாஸ்மாக் கடைக்கு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த கோமாலுார் கிராமத்தை சேர்ந்த பெண்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, கூடலுார் கிராமத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கடையை மாற்றி, கோமாலுாருக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடக்கிறது. கோமாலுாரில் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே அரசு டாஸ்மாக் கடை அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அங்கு வசிக்கும் பெண்கள், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாவர். எனவே, கோமாலுாரில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story