மகளிர் உரிமைத் மேல்முறையீட்டு மனு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

விருதுநகர் மாவட்டத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த நிலையில் சாத்தூரில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பெறப்படும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பெறப்படும் மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பாக நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். பின்னர் ஆய்வின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் குறித்து பயனாளிகளிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் பெண்கள் இந்த திட்டத்தில் வரும் 1000 ரூபாய் எங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் அக்டோபர் 24ம் தேதி வரை மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டன எனவும் தற்போது மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது என்றார். மேலும் தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தற்போது வரை 11 லட்சத்து 85 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளது என்றார். மேலும் பெறப்பட்ட தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மனுக்கள் மீது தற்போது கள ஆய்வில் பரிந்துரைக்கப்பட்ட 7 லட்சத்து 71 ஆயிரம் மனுக்களில் 4 லட்சத்து 5 ஆயிரம் மனுக்கள் மீது கள ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

மேலும் பேசிய உதயநிதி ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட மனுக்கள் மீது விசாரணை செய்த பிறகு முதல்வரிடம் ஆலோசனை பெற்று புதிதாக விண்ணப்பம் செய்ய வழிவகை செய்யப்படும் என்றார். மேலும் ஆளுநர் அலுவலகம் தாக்கப்பட்ட விவகாரத்தில் காவல் துறை அறிக்கை கொடுத்து இருக்கிறார்கள் எனவும் எந்த வித வன்முறை ஆனாலும் கண்டிக்கத் தக்கது என்றார். இதனை திமுக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

Tags

Next Story